பிரதமர் நரேந்திரமோடி பற்றிய கன்னட மொழி திரைப்படம், அடுத்த மாதம் வெளியாகிறது.
செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்பை மையமாக வைத்து, கே.எச்.வேணு என்பவர், பிரதமர் மோடி குறித்து, 8/11 என்ற பெயரில், கன்னடத்தில் திரைப் படம் தயாரித்து உள்ளார். அப்பி பிரசாத், இந்த சினிமாவை இயக்கியுள்ளார். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புவெளியான தேதியை அடிப்படையாக வைத்து, இந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரன், பிரதமர் மோடி வேடத்தில் நடித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் கூர்க் மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தை, அடுத்த மாதம், நாடுமுழுவதும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். மோடி வேடத்தில் நடித்துள்ள, ராமச்சந்திரன், 61, அச்சு அசலாக, மோடி போலவேதோற்றம் உடையவர்.
கடந்த ஆண்டு, கேரளாவின் பையனுார் ரயில் நிலையத்தில் காத்திருந்த போது, ராமச்சந்திரனை சிலர் எடுத்த புகைப் படம், இந்தியா முழுவதும் பரவியது. செல்லும் இடங்களில் எல்லாம், 'செல்பி' எடுத்து கொள்வதற்காக மக்கள் சூழ்வதால் தான்வைத்திருந்த தாடியை, ராமச்சந்திரன், தற்போது எடுத்துவிட்டார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.