பிரதமர் நரேந்திரமோடி , பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், நாட்டின் பிரதமராக இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் ஆவேசத்துடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்
பா.ஜ.க. தொடங்கப்பட்ட 38 ஆண்டு தினத்தையொட்டி, கட்சிநிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே “நமோ ஆப்” மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசியவர், பா.ஜ.க. மீது எதிர்க் கட்சிகள் தவறான குற்றச் சாட்டுகளை சுமத்தி வருவதாகத் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடிய வில்லை என்று குறிப்பிட்ட மோடி, தலித்சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.
ஏழைத்தாயின் மகனான தாம் பிரதமராக இருப்பதை எதிர்க் கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று அவர் மேலும்தெரிவித்தார். பா.ஜ.க.வுக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை தூண்டப்படுவதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, தமது கட்சியினர் பொறுமை காக்கவேண்டும் என்றும், சுயநலமின்றி நாட்டுக்காக பாடுபடவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.