ஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த முஸ்லீம்களை குறை சொல்லக் கூடாது, பாதிரிகளின் சல்லாபங்களுக்கு ஒட்டு மொத்த கிருஸ்தவர் மீது குற்றம் சொல்லக் கூடாது என நமக்கு போதித்தவர்களே இதை விரும்பி செய்கின்றனர்.
அதோடு கடலூரில் ஒருகுறிப்பிட்ட சமூக ஆஷிபா அதே சமூக காமுகன் ஒருவனால் கொலை செய்யப்பட்டு மாற்று சமூகத்தின் மீது பழி சுமத்திய போது பொங்கிவிட்டு அதே சமூகம் என்று தெரிந்தவுடன் மௌனியானவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக கண்ணீர் சிந்துகிறார்கள். சென்னையில் ஒரு ஆஷிபாவை கொலை செய்ததோடு தன் தாயையும் கொலை செய்தவனின் சாதி தேடியவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக குரல் கொடுக்கிறார்கள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு ஆஷிபா சராமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட போது, காதலித்து ஏமாற்றினால் வெட்ட தான் செய்வான் என நியாயம் பேசியவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக நியாயம் கேட்கிறார்கள்.
'லவ் ஜிகாத்' என்ற பெயரில் காம ஆட்டம் நடத்தி ஒரு ஆஷிபாவை நாடு கடத்த முயன்ற போது தடுத்த அவளது தந்தையை எட்டி உதைத்து நகைத்தவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக களத்தில் போராட நினைக்கிறார்கள்.
கேரளாவில் பள்ளிக்கு சென்ற ஒரு ஆஷிபாவின் வயிற்றில் கருவை கொடுத்த போது சிறுபான்மை நலம் பேசியவர்கள் இன்று காஷ்மீர் ஆஷிபாவிற்காக கைகளை உயர்த்துகிறார்கள்.குற்றங்கள் எங்கு நடந்தாலும் குற்றம் தான். சிறுபான்மை பெரும்பான்மை பேதம் குற்றங்களுக்கு இல்லை.
மகாபாரத யுத்தம் நடக்கும் போது, கண்ணனிடம் அர்ஜுனன் கேட்கிறான், "கண்ணா… எதிரே நின்று நான் சண்டையிடப்போகிறவர்கள் எனது சகோதரர்கள், எனது ஆசான், எனது பிதாமகன், அவர்களை நான் எப்படி கொல்ல முடியும்?" என்று. கண்ணன் கூறினான், "அவர்கள் உனக்கு சகோதரர்களாக இருக்கலாம். ஆனால் பெண்ணை அவமானம் செய்த அதர்மிகள். அவர்கள் உனது ஆசானாகவோ பிதாமகனாகவோ இருக்கலாம்,
ஆனால் பெண்ணிற்கு நடந்த அநீதியை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு தர்மத்தை காக்க தவறியவர்கள். அவர்கள் எத்தனை உத்தம குணமும் திறனும் கொண்டிருந்தாலும் அதை விட பெண் நீதியை மறுத்த பாவிகள். அவர்கள் யாராக இருந்தாலும் கொல்ல தயங்காதே. வில்லினை எடு வீரா" என்று மறுமொழி கூறினான். இந்துத்துவம் மோசனமானதல்ல. ஆனால் இந்துத்துவத்தில் மோசமானவர்கள் இல்லாமல் இல்லை. இந்துத்துவவாதிகளை விட இந்துத்துவமே முக்கியம். இந்து என்ற காரணத்திற்காக மட்டும் அநீதி இழைப்போரை மன்னித்துவிடச் சொல்லி இந்துமதம் என்றும் கூறவில்லை. அதனால் ஆஷிபா கொலையில் அவளின் துயரும் கொடுமையுமே நமக்கு தெரிய வேண்டுமே தவிர அவளது மதமோ இனமோ அல்ல…
குதிரை மேய்க்க சென்றவளை இரு சிறுவர்கள் வன்புணர்வு செய்ய முயலும் போது, "பாலியல் குறித்த விழிப்புணர்வு அளிக்காத சமூகத்திடம் கோபம் கொள்ளாமல், அவள் மயங்கியவுடன் அந்த சிறுவனின் தந்தை கோயிலுக்குள் மறைத்து வைத்த போது தவறுக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது கடுமைகாட்டாத சட்டத்தின் மீது கோபம் கொள்ளாமல்கொள்ளாமல், அதை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி தாங்களும் அந்த தவறில் பங்கு கொண்டபோது ஊழலின் மீது கோபம் கொள்ளாமல், தவறை கண்டுபிடிக்க வேண்டிய குழுவில் தவறு செய்தவனே இருக்கும் அதிகாரிகளின் மீது வராத கோபம் அவர்கள் சார்ந்த மதத்தின் மீது மட்டும் வந்துவிடும் என்றால் நிச்சயம் இது அரசியல் தான்…
ஆஷிபா குழந்தை. அதுவும் பெண்குழந்தை. அதற்கு அநீதி நடந்துள்ளது. அதற்கான நீதியை பெற்றுத் தர மனிதனாகவோ இந்துவாகவோ நமக்கு கடமை இருக்கிறது. அந்த கடமைக்காக எங்களது கரங்கள் உயர்ந்தே நிற்கும். அரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபாக்களின் கல்லறைகளில் வேண்டாம்.
You must be logged in to post a comment.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறத்தை பொறுத்தே காட்சிகளின் வண்ணம் நிர்ணயக்கப்படுகின்றது….உங்கள் கண்ணாடியும் மற்றவர் கண்ணாடியும் ஒரே நிறமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.