பிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். 20 இடங்களில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
கர்நாடக சட்ட சபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு, மைசூரு, தாவணகெரே ஆகிய இடங்களில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். கர்நாடகத்தில் நடை பெறும் காங்கிரஸ் அரசு, 10 சதவீத கமிஷன் அரசு என்று மோடி குற்றம் சாட்டினார். இதற்கு முதல்-மந்திரி சித்தராமையாவும் பதிலடி கொடுத்தார். சுமார் 2 மாத இடைவெளிக்குபிறகு பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்தில் மீண்டும் பிரசாரம்செய்ய இருக்கிறார்.
கர்நாடக சட்ட சபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 24-ந் தேதி மனுக்களை தாக்கல்செய்ய கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் தாக்கல்செய்வது முடிந்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர் வருகிற 29-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரத்தை கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் இருந்து தொடங்குகிறார்.
அதைத்தொடர்ந்து மே மாதம் 1-ந் தேதி பல்லாரி, பெலகாவி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 3-ந் தேதி சாம்ராஜ்நகர், உடுப்பி, 5-ந் தேதி கலபுரகி, உப்பள்ளி, 6-ந் தேதி சிவமொக்கா, துமகூரு, 7-ந் தேதி மங்களூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களிடையே பா.ஜனதாவுக்கு ஆதரவுதிரட்டுகிறார். மே 10-ந் தேதி வரை மோடி 20 பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதாக பா.ஜனதா தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி மட்டுமின்றி பா.ஜனதா தேசியதலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்மந்திரி வசுந்தரராஜே, மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர், சத்தீஸ்கார் முதல்-மந்திரி ராமன்சிங், மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன், உமாபாரதி, ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோரும் கர்நாடகத்தில் முகாமிட்டு பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.