ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு கல்வி அளித்தார்களா?

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வராமல் இருந்திருந் தா ல் இந்தியாவில் கல்வியே இருந்திருக்காது அதனா ல் அவர்களை கை கூப்பி வணங்குகிறேன் என்று சோ று போடும் இடத்திற்கு சொம்பு தூக்கும் வைரமுத்து பேசியிருக்கிறார்..

ஏதோ ஆங்கிலேயேர்கள் வழியாக கிற்ஸ்துவர்கள் தான் இந்தியாவில் கல்வியை கொண்டு வந்துள்ளார் கள் என்று உளறிவரும் வைரமுத்து அவர்களே.. இந்தியா வின் கல்வி பற்றி தெரியுமா?உண்மையில் உலகிற்க்கே கல்விபோதித்த இந்தியா இன்று தன்னுடைய அடையாளத்தை இழந்து நிற்க முக்கிய காரணமே ஆங்கிலேயர்கள் தான்.

இன்றைக்கு உலகின் டாப் 500 யூனிவர்சிட்டிகளில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? ஆனால் 2500 ம் வருசத்துக்கு முன்பே உலகின் முதல் யூனிவர்சிட்டியை வைத்து உலகிற்கே பாடம் கற்ப்பித்த நம்மிடம் வைரமுத்து ஆங்கிலேயர்கள் வந்ததால் தான் இந்தியாவில்
கல்வி தோன்றியதாக கூறுவதை பார்க்கும் போது அவ னெல்லாம் தமிழ் இலக்கியங்களை படித்து இருப்பானா என்று நினைக்கதோன்றுகிறது.

தன்னு டைய அடையாளத்தை கலாச்சாரத்தை இழ க்கும் நாடுகள் இறுதியில் தங்களின் சுய அறிவையும் இழந்து நிற்கும் என்பதற்கு இந்தியாதான் மிக சிறந்த உதாரணம்.அதன் அடையாளம்தான் வைரமுத்து மாதிரிஆட்களின் உளறல்கள்.

உலகின் 4 வது வல்லரசு நாடாகவும் பொருளாதார நாடாகவும் உயர்ந்துவரும் இந்தியா தன்னுடைய கல்வி அமைப்பில் கோட்டைவிட்டது எனபது உண் மை யே..ஆங்கிலேய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட\ மெக்காலேயின் கல்விகொள்கை க்கு இரையானது இந்தியாவின் கலாச்சாரம் மட்டுமல்ல. அதனோடு பயணித்த வந்த இந்தியாவின் உயர்கல்வியும் தான்.

உலகின் முதல் பல்கலைகழகம் தக்சசீலம் தெரியுமா?

காந்தார நாடு தெரியும அல்லவா..நம்ம மஹாபாரத சகுனி பிறந்த இடம். இந்த தக்சசீலம் ஊர் அந்த காந்தார நாட்டில்தான் உள்ளது. ராமனின் தம்பி பரதன் இந்த நாட்டை கைப்பற்றி தன்னுடைய மூத்தமகன் தக்சன் பெயரில் நிர்மாணித்த நகரமே தக்சசீலமாகும். அதனாலே இந்த பல்கலைகழகத்தின் பெயரும் தக்சசீல பல்கலைகழகம் என்றே அழைக்கப்பட்டது

தட்சசீலம் அன்றைய இந்தியாவில் இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் டேக்ஸிலா என்ற ஊர் உள்ளது.இதுதான் 2700 ஆண்டுகளுக்கு முன் உல கி ல் முதன் முதலில்தோன்றிய பல்கலைக்கழகமான தக்சசீலா தோன்றிய இடம்.இதனுடைய காலம் கிமு ஏழாம் நூற்றாண்டிலிருந்து கிபி ஐந்தாம் நூற்றாண்டுவரை என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர் கள்.
.
2700 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பல்கலையில் குறைந்தது பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கிரீஸ், பாரசீக ம்,சீனா,அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்தெல் லாம் வந்து தங்கி படித்திருக்கிறார்கள் என்றால் பாரதநாட்டின் புகழ் அப்பொழுதே உலகமெ ங்கும் கொடி கட்டி பறந்ததை அறிந்து கொள்ளலாம்.

இந்த பல்கலைகழகத்தில் வேதங்கள்,மருத்துவம், அறிவியல், கணிதம், இசை,சட்டம், விவசாயம், அரசியல், போர் பயிற்சிகள் போன்ற 65க்கும் மேற்பட்ட பாடங்களில் உயர்கல்வி போதிக்கபட்டுள்ளது. தக்ச சீலா பல்கலை கழகத்தில் சும்மா காசு கொடுத்து சீட் வாங்கிவிட முடியாது.அரசியல் தலையீடு காரண மாக சீட்கிடைக்காது,

ஏன்.சாதி பெயர் சொல்லி எல்லாம் இங்கு சீட் வாங்கிவிட முடியாது..ஒன்லி மெரிட்தான்..அந்த காலத்திலே யே என்டரென்ஸ் எக்ஸாம் நடத்தி தான்மாணவ ர்களை தேர்வு செய்துள்ளார்கள்.என்றால் அங்கு படிப்பு எப்படி இருந்திருக்கும்.. யோசித்து பாருங்கள்..

இந்த பல்கலை கழகத்தில் ஆசிரியராக இருந்தவர்கள் யார் தெரியுமா… உலகமே வியந்து கவனிக்கும் அர்த்த சாஸ்த்திரம் எழுதிய நம்மசாணக்கியர் இங்கு தான் வேலை பார்த்திருக்கிறார்  இன்றைக்கும் ஒரு நாட்டின் ஆட் சி எப்படி இருக்க வேண்டும், சட்டங்கள்,நிதி மேலாண்மை,போர் தந்திரங்கள் என்று ஒரு நாட்டின் ஆட் சிக்கு தேவையான அனைத்து விசயங்களையும் கொண்டு உலகிலேயே ஒரே ஒரு நூல் இருக்கிறது என்றால் அது அர்த்த சாஸ்திரம்தான்..

இங்கு வேலை பார்த்த இன்னொரு பேராசிரியர் பாணினி.. இன்றைக்கு நாம் தட்டு தடுமாறி படிக்கி றோமோ. இலக்கணம்.அந்த இலக்கணத்தை சமஸ் கிருத மொழிக்கு எழுதி உலகிலேயே முதல் இலக்கண நூல் என்ற பெருமைபெற்றது இவர் எழுதிய அஷ்டாத்யாயி தான்.

சரி வாத்தியார்களே..இப்படியென்றால் அங்கு படித்தவர்கள் இவர்களை விட ஒரு படி மேலே தானே இருப் பார்கள்..அதுவும் நிஜம்தான்.ஜீவகன் என்று இங்கு படி த்த மாணவர் ஒருவர் தான் உலகிலேயே நாடிதுடிப்பை வைத்து வைத்தியம் பார்க்கும் முறையை உலகிற்கு சொன்னவர்..இவர் தாங்க நம்ம புத்தரின் ஆஸ்தான மருத்துவராக இருந்துள்ளார்

இன்றைக்கு கார்ட்டூன் படங்களை பார்க்கிறார்களே நம்ம பசங்க..இதுக்கு பிள்ளையார் சுழிபோட்டதும் இந்த தட்சசீல பல்கலை கழகமே..இங்கு படித்த மாணவரான விஷ்ணு ஷர்மாதான் சிறுவர்களுக்கு அறிவுவளர்க்க மிருகங்கள் பேசுகிற மாதிரி பஞ்சதந்திர கதைகளை உருவாக்கி முதல் கார்ட்டூன் எபிசோடை தயாரித்தவர்

அடுத்து பீகாரில் இருக்கும் நாளந்தா பல்கலை கழகம். இது 5-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட து இந்தியாவின் கல்விப் பெருமையை உலகறியச் செய்த யூனிவர் சிட்டி. பாடம் என்பதை புத்தகத்திலிருந்து கற்க வேண்டும் என்பதைத் தாண்டி, ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பல்கலைக்கழகம் செயல் பட்டது.

இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதும் அவ்வளவு சுலபமானது அல்ல, மாணவர்கள் மூன்று நிலை நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். மூன்றிலும் வெற் றி பேரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த பல்கலைக் கழகத்தில் சீட் கிடைக்கும்.சீனர்கள், கிரேக்கர்கள், பெர்ஷியர்கள், திபெத்தியர்கள் என பல நாடுக ளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கே படித்து அறிஞர்களாக திகழ்ந்தனர்.

உலகின் முதல் கணிதவியலாளர் ஆரியபட்டா இந்த பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்தார்.இங்கிருந்து தான் உலகின் முதல் கணித நூலே உருவானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.இங்கே 10000 மாண வர்கள் வரை பாடம்கற்கும் வசதி இருந்துள்ள து .அவர் க ளுக்கு 2000 ஆசிரியர்கள் வரை பாடம்சொல்லிக் கொடுத்து இருந்தார்கள்.என்றால் இந்தியாவின் உயர்கல்வி எப்படி இருந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

இப்படி பெருமைவாய்ந்த நாளாந்தா பல்கலை கழகத்தை இந்தியா மீது படையெடுத்து வந்த அந்நிய ஆக்கி ரமிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு அழித்துள்ளார்கள் என்பதை நினைத்தால் கல்வியையே அழித்த கொடூரர்கள் நம்முடைய கலாச் சாரத்தை விட்டு வைக்க நினைப்பார்களா?

கிபி 1193 ல் ஆப்கானிஸ் தானை சேர்ந்த முகம்மது பின் பக்தியார் கில்ஜி என்கிற மூதேவிக்கு ஒருதட வை உடல்நலம் சரியில்லாமல் போகவே உடன் இருந்தவர்கள் பாடலிபுத்திரத்தில் இருக்கும் நாலந்தா பல்கலை கழகத்தின் மருத்துவர் ராகுல் ஸ்ரீ பத்ரா என்பவர் கை வைத்தால்தான் இந்த நோய் குணமாகும் என்று கூற அந்த மூதேவியும் பத்ராவை அழைத்து நோயை குணமாக்கி கொண்டார்.
.
பிறகு நம்முடைய மதத்தில் இல்லாத மருத்துவ அறிவு இந்து மதத்தில் இருக்கிறதே என்று பொறாமை கொண்டு நாலாந்தா பல்கலை கழக லைப்ரரியையே தீ வைத்து கொளுத்தி இருக்கிறான் என்றால் நம்முடைய பாரம்பரி யத்தின் மீது அந்நிய ஆக்கிரமிபாளர்கள் கொண்டிருந்த வெறுப்பை அறிந்து கொள்ளலாம் .வரலாற்றின்படி நாளாந்தா பல்கலை கழகம் மூன்று முறை இஸ்லாமிய மன்னர்களால் அழிக்கப்பட்டுள்ளது

இஸ்லாமிய மன்னர்கள் நேரடியாக இந்தியாவின் கல்வியை அழித்தார்கள் என்றால் ஆங்கிலேயர்கள் மறைமுகமாக இந்தியாவின் கல்வியை சிதைத்தார் கள்.அதனுடைய தாக்கம்தான் இன்றும் இந்திய மாணவர்கள் ஆய்வு திறன் பற்றிய அறிவு இல்லாமல் ஏட்டு சுரைக்காயை மட்டும் படித்து வருகிறார்கள்

மெக்காலே கல்வி முறை இந்தியாவில் அமலுக்கு வரும் வரை இந்திய மாணவர்கள் வேதங்கள், , யோகா, தர்க்கம், அரசியல், அரசதந்திரம், இதிகாசம், புரா ணம் மற்றும் ஜோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பொதுஅறிவு போன்ற பல கலை களை குருகுல் கல்வியின் மூலம் கற்றுவந்தார்கள்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கூறும் இந்துமதம் தெய்வத்துக்கு அடுத்தபடியில் குருவையே வைக்கிறது. அதாவது மனிதர்களில் உயர்ந்தவர் குருவே. இந்த குருவின் மூலம் காலம்காலமாக எடுத்துசெல் ல ப்பட்ட ஞானங்களே இந்திய கல்வியை உலகளவில் அடையாளம் காட்டியது.

இப்படி பெருமை வாய்ந்த இந்திய கல்வியை அழித்தால் தான் நாம் அங்கே வேரூன்ற முடியும்.அதற்கு முதலில் இந்தியாவின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் வாதாடி ஆங்கில கல்வி முறையை 1835ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி இந்தியாவில் தினித்தான் மெக்காலே

குருகுல கல்வி முறையில் கல்வியானது ஞானம் சம்பந்தப்பட்டது.ஆனால் மெக்காலே கல்விமுறையில் கல்வியானது வியாபாரம் சம்பந்தப்பட்ட து. இதைப்படித்தால் இன்ன வேலைகிடைக்கும் இவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று திட்டமிட்டே ஒருகுறுகிய வட்டத்தில் பயிற்று விக்கப்படும் கல்வியினால் இந்தியா எப்படி சர்வதேச அளவில் ஜொலிக்க முடியும்?

ஆங்கிலேயர்கள் அளித்த மெக்காலே கல்வி முறையில்தான் நாம் இன்றும் படித்துக் கொண்டு அலைகிறோம்.இதனால்தான் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக் இருந்து வந்த குருகுலகல்வி முறையை இழந்தோம்.உலகிலேயே குருகுலத்தின் மூலம் ஆரம்ப கல்வியை சொன்னவர்களும் நாம்தான்.தட்சசீல பல் கலை கழகம் நலந்தா பல்கலைக ழகங்கள் மூ லம் உய ர் கல்வியை போதித்ததும் நாம் தான் என்பது நம் அனைவருக்கும் பெருமையல்லவா..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடற்படை தினத்தை முன்னிட்டு வீர ...

கடற்படை தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின்  துணிச்சல்மிக்க வீரர்களுக்கு ...

முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மண் ...

முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மண்சந்தா மறைவிற்கு மோடி இரங்கல் முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மன்சந்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றவர் மன்சந்தா என பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "அர்ப்பணிப்புக்கும், சிறப்புக்கும் பெயர் பெற்ற இந்திய ஸ்குவாஷின் ஜாம்பவான் ராஜ் மன்சந்தா அவர்கள் மறைவால் வேதனை அடைந்தேன். அவர் வென்ற விருதுகள், விளையாட்டின் மீதான அவரது ஆர்வம், தலைமுறைகளை ஊக்குவிக்கும்  திறன் ஆகியவை அவரை தனிச்சிறப்புடையவராக ஆக்கின. ஸ்குவாஷ் மைதானத்திற்கு அப்பால்,  அவரது சேவை ராணுவத்திலும் தொடர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி: பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதி ...

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி 'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வே ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும் – அண்ணாமலை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நி ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...