இரயில் டிக்கெட்டுகளில் தமிழ்! சாதித்துகாட்டிய ஆசீர்வாதம் ஆச்சாரியின் நேர்காணல்

தமிழகத்தில் வழங்கப் படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம், இந்தியுடன் மாநிலமொழியான தமிழிலும் பயண விவரங்கள் அச்சிட்டு அளிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் ரயில்வே துறையை நவீனப் படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ரயில் நிலையங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல்சேவை மையம், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள், இலவசவைபை, எஸ்கலேட்டர், லிப்ட் ஆகியவசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து பயணிகள் ரயில் டிக்கெட்டுகளில் சிறிதுமாற்றம் கொண்டுவர ரயில்வேதுறை முடிவெடுத்தது. இதன்படி ஆங்கிலம், இந்திமொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டு வந்த ரயில் பயணிகளுக்கான டிக்கெட்டுகளில் ஊரின் பெயர்களை அந்தந்த மாநிலமொழிகளில் அச்சிடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரிதான் இந்த யோசனையை முன்வைத்தது மட்டும் இன்றி, முனைப்புடன் இரயில் அமைச்சகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி தற்போது இதைவெற்றிகரமாக நிகழ்த்தியும் காட்டியுள்ளார். ஆசிர்வாதம் ஆச்சாரி ஏற்கனவே முகநூலில் தமிழ் மக்களிடையே மிகவும் பிரசித்திபெற்றவர். தமிழகம் தொடர்பாக எந்த கோரிக்கை மற்றும் புகார்களை யார்(கட்சி பேதமின்றி) இவருடைய முகநூலில் யார் எழுதினாலும் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழைத்து தெரிவிப்பது மட்டுமின்றி; அந்த விஷயம் முடிந்தவுடன் முகநூலில் எழுதியவர்களுக்கு தவறாமல் விடை அளிப்பார்.

அவரிடம் இரயில் டிக்கெட்டுகளில் தமிழ் பற்றி விவாதித்தோம்.

தமிழ் கதிர் : ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழிகள் கொண்டு வர வேண்டும் என்ற தங்களுடைய முயற்சிக்கு காரணம் என்ன?

ஆசீர்வாதம் ஆச்சாரி : தற்போதைய நடைமுறையின் படி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரயில் டிக்கெட்டுகள் விநியோகிக்கப் படுகின்றன. தமிழகத்தில் பெருவாரியான மக்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரியாது. தாங்கள் கேட்கும் இடத்திற்கு தான் பயணச்சீட்டு வழங்கப் பட்டதா? என்பதைக் கூட சரிபார்க்க கூட முடியாது. தவறாகும் பட்சத்தில் அபராதம் பயணிகளின் தலையில் தான். இந்த சிரமத்தை தவிர்க்கவே இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தேன்.

தமிழ் கதிர் : தமிழகத்தில் பலர் மத்திய அரசு ஹிந்தியை திணிக்கின்றது என்று குற்றம் சாட்டுகின்றனர். அதை தவிர்க்கவா இந்த முயற்சி?

ஆசீர்வாதம் ஆச்சாரி : என்னுடைய முயற்சி முற்றிலும் மக்களின் நலனுக்காகவே. இதற்கு எந்த அரசியல் சாயமும் பூச வேண்டாம். இதற்காக நான் கடந்த ஒரு வருடமாக தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தேன்.

தமிழ் கதிர் : இந்த முயற்சியை எப்படி எடுத்து சென்றீர்?

ஆசீர்வாதம் ஆச்சாரி : நான் ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர். இதன் செயற்குழு கூட்டத்தில் கடந்த வருடம் நான் பங்கேற்ற போது, இந்த கருத்தை முன்வைத்தேன். இதன் பலன்களை நான் எடுத்துரைத்தேன். குழுவும் முயற்சியை பாராட்டி தங்களது முழு ஆதரவையும் கொடுக்க முன்வந்தனர். தற்போது அச்சிட உதவும் Oracle மென்பொருளை முற்றிலும் மாற்றியமைத்து தமிழ் Unicode ஐ சேர்க்க வேண்டும். இதற்கு சில மாதங்கள் தேவைப்படுவதால். தை 2018 க்குள் முடிக்க முதலில் திட்டமிட்டோம், தற்போது தான் சாத்தியப்பட்டுள்ளது.

தமிழ் கதிர் : அனைத்து ரயில் நிலையங்களிலும் தமிழில் பயண சீட்டு கிடைக்குமா?

ஆசீர்வாதம் ஆச்சாரி : இல்லை. முதலில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் கிடைக்கும். 2-3 நாட்கள் சோதனை ஓட்டத்திற்கு பிறகு அனைத்து ரயில் நிலையங்களில் கிடைக்கும்.

தமிழ் கதிர் : இந்த முயற்சிக்கு மிகவும் உதவியது யார் ?

ஆசீர்வாதம் ஆச்சாரி : இந்த பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களிடம் நேரில் முறையிட்டேன். அவரும் சம்பந்தபட்ட அதிகாரிகளை உடனடியாக தொடர்புக் கொண்டு பணிகளை விரைவில் முடிக்கும் படி உத்தரவிட்டார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக நான் செய்த மிகப் பெரிய பணி இதுவே. என்னை இப்பணியில் ஈடுபடுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், பா.ஜ.க தேசியத் தலைவர் அமீத் ஷாவுக்கும், அரசு அதிகாரியாக இருந்த என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்த பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சாமிக்கும் நன்றி. தமிழகத்துக்குத் தேவையான ரயில்வே திட்டங்களை தருவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என்று முடித்துக் கொண்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...