இந்தியாவில் வேலைபார்க்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் இதுவரை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது நம் நாட்டில் சுமார் 40,000 வெளிநாட்டினர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களாவர்.
மேலை நாடுகளில் பொருளாதார சீர்குலைவு காரணமாக வேலை
இழப்பு அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வேலைவாய்ப்பு தேடுவது மேல்நாட்டு இளைஞர்களுக்கு நிர்ப்பந்தமாகிறது. அமெரிக்காவில், வறுமையில் வாடுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், இவர்களுக்காக அந்நாட்டு அரசு செலவிட்டு வரும் தொகை கணிசமாக உயர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், கட்டமைப்பு வசதி, ஆரோக்கிய பராமரிப்பு, மின் மற்றும் எரிசக்தி, எண்ணெய், எரிவாயு, வாகன உற்பத்தி, மருந்து ஆகிய துறைகளில் அதிக அளவில் வெளிநாட்டினர் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இவை தவிர, பயணம் மற்றும் சுற்றுலா ஏற்பாடு, விமான போக்குவரத்து, கல்வி மற்றும் விளையாட்டு போன்ற துறைகளும் இவர்களை அதிகம் பயன்படுத்திக் கொள்கின்றன.
நிறுவனங்களில் உயர் பதவியிலிருந்து நடுத்தர மற்றும் அறிமுக நிலை பதவிகள் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. உயர் பதவிக்கு ஆண்டுக்கு 2.50 லட்சம் டாலரும், நடுத்தர பதவிகளுக்கு 0.80-1.25 லட்சம் டாலரும் சம்பளமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.