கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கர்நாடகத்தில் அரசியல்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மாநில தலைவரும், முதல்வர் வேட்பாளருமான, பி.எஸ்.எடியூரப்பா வெளியிட்டார். இதில் பெண்களை கவரபல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இலவச நாப்கின், வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் என்று கவர்ச்சி திட்டங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
முக்கிய அமசங்கள் வருமாறு :
* தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்தும், கூட்டுறவு சங்கங்களிட மிருந்தும் 1 லட்சம்வரை உள்ள பயிர்கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முதல் அமைச்சரவை கூட்டத்தில் உத்தரவிடப்படும்.
* டிஜிட்டல் இந்தியா ஏழை குடும்பங்களுக்கு ஊடுருவிவருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்குவதற்காக "முக்கிய மந்திரி ஸ்மார்ட்ஃபோன்யோகன்" ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.
* ஒவ்வொரு கல்லூரி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி இதற்காக "முக்கிய மந்திரி லேப்டாப் யோஜனை" பாஜக துவக்கும்.
* பி.ஜே.பி, 10,000 ரூபாய்க்கு நேரடியாக வருமானதரும் வகையில் 20 லட்சம் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு "நெகிலாயோகி யோஜன்" ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.