மே 6ம் தேதி நீட் தேர்வைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை சென்ற முறையை விட 31 சதவீதம் நீட் தேர்வு எழுதப் போகிறார்கள் என்பது நீட் தேர்வு மீது மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையைக் காண்பிக்கிறது.
தமிழகத்தில் சென்ற முறை 149 நீட் தேர்வு மையங்கள் இந்தமுறை 170 நீட் தேர்வு மையங்கள.; இந்த முறை அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததால் வேறு மாநிலங்களுக்கு சில மாணவ, மாணவிகள் செல்ல வேண்டியிருக்கிறது.
அடுத்த முறை அதிகமானோர் விண்ணப்பித்தாலும் உடனே கூடுதலான தேர்வு மையங்கள் அமைய ஏற்பாடு செய்யத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வுக்கு எழுதும் மையங்களை மாணவர்கள் தான் தேர்வு செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையால் தமிழகத்தில் ஏதோ தமிழகத்திற்கு மத்திய அரசு பச்சை துரோகம் செய்கிறது என்று வாய்க்கு வந்தபடி பேசுவது கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் விளக்கம் கொடுத்த பின்பும் மாணவர்களுக்கு இந்த சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கும,; தன்னம்பிக்கையோடு இந்த சூழ்நிலையை எதிர் கொள்வதற்கு தன்னம்பிக்கை அளிக்காமல் தங்கள் அரசியல் இலாபத்திற்காக தமிழக மாணவர்களின் மனதில் அவநம்பிக்கைளை ஏற்படுத்தும் அளவிற்கு தமிழகக் கட்சிகளின் பல தலைவர்கள் பேசி வருவது வருந்தத்தக்கது.
அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அதற்கான பொருளாதார சூழல் எந்த அளவிலும் தேர்வை எதிர்கொள்வதைத் தடுத்து விடக்கூடாது என்பதற்காகவும் இன்று காலையிலே தமிழக அரசு வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எனது கோரிக்கையை நான் பதிவு செய்தேன்.
தமிழக அரசு மாணவர்களுக்கு உதவியும், உடன் செல்பவர்களுக்கு பயணப்படியும் வழங்குவோம் என அறிவித்திருப்பது ஆறுதல். அதனால் தமிழகத்தில் எழுதும் ஒரு லட்சம் மாணவர்கள் எந்த தன்னம்பிக்கையோடு எழுதுகிறார்களோ, அதே தன்னம்பிக்கையோடு வெளியூர் செல்லும் மாணவர்களும் எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக அரசியல்வாதிகளின் அவநம்பிக்கை வார்த்தைகள் உங்கள் தன்னம்பிக்கையை குலைத்துவிடக் கூடாது. இதில் CBSE நிறுவனம் முற்றுகையிடுவது போன்ற அரசியல் நீட் தேர்வுகான ஏற்பாடுகள் உருகுலைக்குமே தவிர தீர்வாகாது.
அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள் வெளி மாநிலம் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பல உதவிகளைச் செய்கிறோம் என முன் வந்திருப்பதற்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போன்ற நேர்மையான நேர்மறை அரசியல் தான் தமிழகத்திற்கு ஆரோக்கியத்தை தரும். அடுத்த முறை இந்தச் சங்கடங்கள் எந்த மாணவனுக்கும், மாணவிகளுக்கும் ஏற்படக் கூடாது என்பதில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்ற வார்த்தையை CBSE காப்பாற்றி அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதை மத்திய அரசு உறுதிப்படுத்தும் என்பதைனையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாநில அரசும் அதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் மக்கள்;; பணியில்
(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.