வாக்கு வங்கிக்காக திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் அம்பேத்கரை புறக்கணித்து ஏன் என பிரதமர் நரேந்திரமோடி கேள்வி எழுப்பினார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும்கட்சியான காங்கிரஸ், எதிர் கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல்பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக பேரவைதேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரசாரகூட்டத்தில் மோடி பேசுகையில், மக்களிடம் செல்வாக்கை இழந்துவரும் காங்கிரஸ் கட்சி, தினம்தோறும் ஒரு பொய்க் கதையை சொல்லி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் தினமும் புதுபுது பொய்களை அவிழ்த்துவருகிறது. நாட்டிற்காக உழைத்த தலைவர்களை காங்கிரஸ் அவமதித்துவருகிறது. குடும்ப அரசியல் செய்யும் காங்கிரஸிடம் இருந்து மண்ணின் மைந்தர்களுக்கு பாராட்டுகிடைக்கும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. நேருகுடும்பத்தினரை தவிர மற்றவர்கள் அந்தகட்சியில் ஒரங்கட்டப்படுவது வழக்கமாக நடந்துவருகிறது.
யாருடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டுமோ? யாருக்குமரியாதை அளிக்க வேண்டுமோ? தலைமுறை தலைமுறையாக நமக்கு ஊக்க சக்தியாக இருந்து வருபவர்களின் பிறந்த நாட்களை கொண்டாடுவதில்லை என்பது இங்குள்ள காங்கிரஸ் அரசின் முடிவாக உள்ளது. நவீன கர்நாடகாவை வடிவமைத்த நிஜலிங்காப்பாவை காங்கிரஸ் புறக்கணித்தது. ஒவ்வாரு முறையும் அவரை அவமானபடுத்த காங்கிரஸ் தவறவில்லை.
சித்ரதுர்காவை ஆட்சிசெய்த கடைசி மன்னர் வீரமடகாரி நாயக்கர் மற்றும் அவரது பேர்ப்படையில் இடம்பெற்றிருந்த தலித் வீராங்கணை ஒனாகே ஒபாவா போன்றவர்களை காங்கிரசார் மறந்துவிட்டனர். வீர மடகாரி நாயக்கர், ஒனாகே ஒபாவா, நிஜலிங்கப்பாவை போல், அண்ணல் அம்பேத்கரையும் காங்கிரஸ் திட்டமிட்டு புறகணித்து அவமதித்தது. அவரைகாக்க வைத்து அவமானப்படுத்தியது. அவர் இறந்து பல ஆண்டுகள் ஆகியும். பாரத ரத்னா விருது கூட வழங்கப்படவில்லை குற்றம்சாட்டிய மோடி, வாக்குவங்கி அரசியலுக்காக திப்புசுல்தான் பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் அம்பேத்கரை புறக்கணித்து ஏன் என கேள்வி எழுப்பினார்.
திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாடுவதன் மூலம் கர்நாடகம் மற்றும் சித்ரதுர்கா மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் அவமதித்துவிட்டது. சித்ரதுர்கா பகுதியை ஆண்ட நாயக்கர்களுக்கு விஷம்கொடுத்துக் கொன்றவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதால் இந்தமண்ணையும், உங்களையும், வரலாற்றையும் அவர்கள் இழிவுப்படுத்தி விட்டனர்.
அம்பேத்கரின் பெருமைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு உலகம்முழுவதும் பிரபலப்படுத்தி வருகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டுகிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரையும், முஸ்லிம்மதத்தை சேர்ந்தவரையும் குடியரசு தலைவ ராக்கியது பாஜக தான்.
ஏழைகள் உயர்ந்த இடத்திற்குவருவதை காங்கிரஸால் ஏற்கமுடியாது. தாழ்த்தப்பட்டவர்களை வாக்குவங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. பெருமைக் குரியவர்களின் வாழ்க்கை வரலாறை காங்கிரஸ் எப்போதும் கொண்டாடியதில்லை என்று மோடி காங்கிரஸை கடுமையாக சாடினார்.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.