கன்னியாகுமரியில் துறைமுக திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருப்போம் என துறைமுக ஆதரவுஇயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ். வேல் பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: கன்னியா குமரி மாவட்டத்தில் வர்த்தக துறைமுகம் அமைய வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியில் தற்போதும் கன்னியா குமரியில் துறைமுகம் அமைய உள்ளது.
குளச்சலில் துறைமுகம் கொண்டுவந்தால் மக்கள்தொகை நெருக்கம் காரணமாக குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்படும். எனவே, மக்கள் குடியிருப்புக்கு சேதம்வராத வகையில் கன்னியா குமரியில் துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்க உள்ளன.
இந்நிலையில், கன்னியாகுமரி பகுதியில் துறைமுகம் வேண்டாம்; குளச்சல் பகுதியில் துறைமுகம் அமைக்கவேண்டுமென்று எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாகசேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதுகண்டிக்கத்தக்கது.
குமரியில் சரக்குபெட்டக மாற்று முனையம் அமைந்தால், அது இந்தியாவுக்கு வர்த்தகத்தில் பெரியலாபத்தை ஏற்படுத்தி கொடுப்பதோடு, இலங்கை போன்ற நாடுகளுடைய வர்த்தகத்தை கட்டுப்படுத்தி, சீனாபோன்ற நாடுகளின் தலையீட்டையும் தடுக்க முடியும்.
இம்மாவட்டத்தில் உள்ள 6 எம்எல்ஏக்களும் சரக்குபெட்டக மாற்று முனையத் திட்டத்தை எதிர்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இளைஞர்களுக்கு வாழ்வு கொடுக்கும் சரக்கு பெட்டக மாற்று முனையத்திட்டத்தை வேகமாக செயல்படுத்த உறுதுணையாக இருப்போம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.