ஓட்டு மெஷின்ல எந்த பட்டனை அமுத்தினாலும் தாமரைக்குத்தான் விழுதுன்னானுங்க. 104 சீட்டை தாண்டலை. நோட்டாவோட பாதிப்பால 6-8 சீட் பாஜக இழந்தது என்பது நிஜம். ஒருவேளை ஒட்டு மெஷின்ல தில்லுமுல்லு பண்ணியிருந்தா எளிதாக 130 ஐ தாண்டியிருக்கலாமே!
குதிரைபேரத்தில் பாஜக ஈடுபடுகிறதுன்னு புரளியை அவிழ்த்து விட்டானுங்க. அது உண்மையா இருந்திருந்தா எளிதாக 10-15 எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடிந்திருக்காதா என்ன?
கவர்னர் ஆட்சியமைக்கக் கூப்பிட்டது தப்புன்னு சொன்னானுங்க. சுப்ரீம் கோர்ட் அவர் கூப்பிட்டது சரிதான் என்று தலையில் குட்டியது. அமைதி காத்தது பாஜக.
தற்காலிக சபாநாயகரை நியமித்தது தவறுன்னு மீண்டும் பஞ்சாயத்தைக் கூட்டினானுங்க. மீண்டும் செருப்படி கொடுத்து எல்லாம் சரிதான். போய் வேலையைப் பாருங்கன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லிச்சு. இப்போதும் எந்தச் சலனத்தையும் காட்டிக்கொள்ளவில்லை பாஜக.
ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்த போதும் நம்பிக்கை தீர்மானத்தை இன்று 4 மணிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. காங்கிரஸ் போல கூப்பாடு போட்டு நீதிமன்றத்தை அவமதிக்கமல் ஓகே நாங்க ரெடின்னு அரசியல் நாகரீகத்தைக் காட்டியது பாஜக.
கால அவகாசம் குறைக்கப்பட்டதால் MLAக்களிடம் நியாயத்தைக் கூட உணர்த்த முடியாமல் எண்ணிக்கையை பெறமுடியாததால் தாமாகவே ராஜினாமா செய்தார் எடியூரப்பா. தார்மீகம் என்றால் என்ன என்று அனைவருக்கும் காண்பித்தது பாஜக.
இப்படி அனைத்து விஷயங்களிலும் எல்லை மீறாமல் கண்ணியம் காத்த பாஜகவை தமிழக திராவிடக் கட்சிகளும் எச்சை ஊடகங்களும் கேள்வி கேட்பது காலக்கொடுமை.
இதுவும் கடந்து போகும். மீண்டு வருவோம். ஜெய்ஹிந்த்!!
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.