வளர்ச்சியின் பலன்கள் பரமஏழைகளை சென்றடைந் துள்ளது என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர்மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள நிலையில், கிராமப்புற மக்களுக்கு பல்வேறு சேவைகளை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்றுவழங்கும் கிராம சுயாட்சி திட்டத்தின் சாதனைகளை பிரதமர் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப் பதாவது:
வளர்ச்சியின் பலனை பரம ஏழைகளுக்கு கொண்டுசெல்லும் தனித்துவம் மிக்க கிராமசுயாட்சி திட்டத்தை அரசு செயல் படுத்தி வருகிறது. அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடந்த ஏப்ரல் 14 – மே 5 வரை 16,850 கிராமங்களில் இத் திட்டம் செயல்படுத்தப் பட்டது. இதில் மத்திய அரசின் 7 முன்னோடி திட்டங்கள் இந்தகிராமங்களில் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. மக்களின் வீடுகளுக்கே சென்று அரசுசேவைகளை வழங்குவது, அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை சவுகரியமாக்கு வதுதான் இத்திட்டம்.
21 நாள் கிராமசுயாட்சி திட்டத்தில் 7.53 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பும் 5,02,434 குடும்பங்களுக்கு மின்சாரஇணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. 16,682 கிராமங்களில் 25.03 லட்சம் எல்இடி பல்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்திரதனுஷ் திட்டத்தின்கீழ் 1,64398 குழந்தைகள் மற்றும் 42,762 பெண்களுக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது.
ஏப்ரல் 14 முதல் மே 5 வரை புதிதாக 20,53,599 பேருக்கு ஜன்தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.330-க்கு ஓராண்டு ஆயுள் காப்பீடு பெறும் திட்டத்தில் 16,14,388 பேரும் ரூ.20-க்கு ஓராண்டு விபத்துக்காப்பீடு பெறும் திட்டத்தில் 26,10,506 பேரும் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள், சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பலரின் பங்களிப்பால் இத்திட்டம் வெற்றிபெற்றுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.