ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீசி எறியப்போகிறேன்

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளது குறித்து விசாரணைநடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையைக் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடுமையாகப் பேசியுள்ளார்.

ஐநா மனித உரிமை அமைப்பு காஷ்மீர் தொடர்பாக முதல்முறையாக 49 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் ஸெய்த்ராத் அல் ஹுசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 2016க்குப் பிறகு நடந்த அப்பாவிமக்கள் படுகொலைகள் மீது விசாரணை தேவை. காஷ்மீரில் பெலட் துப்பாக்கிகள் மூலம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது.

அப்பாவி மக்கள் மீது அளவுக்கதிகமாக வலுவை இந்தியா பயன் படுத்தியுள்ளது என்று சாடியுள்ளார். மேலும் காஷ்மீர் நிலரவம். அங்கு நடைபெறும் மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகள் குறித்து ஒட்டுமொத்த பன்னாட்டுவிசாரணை நடத்தவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை குறித்து பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி நிருபர்களிடம் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையைக் குப்பைத் தொட்டியில் நான் வீசி எறியப்போகிறேன்.

ஒருசார்பான அறிக்கையை அளிக்கும் இடது சாரி சார்ந்த அமைப்பு. இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களை நரகத்தில் தள்ள வேண்டும் என்று தான் நான் கூற வேண்டும். காஷ்மீர் விவகாரம் பற்றி தெரியாதவர்கள் தயாரித்த அறிக்கை என்பதால், அவர்கள் குறித்து நான் கருத்துச்சொல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்கிடையை ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையை மத்திய அரசு கடுமையாக விமர்சித்து, கண்டித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், 1994-ம் ஆண்டு தீர்மானத்தோடு இந்தவிஷயம் முடிந்துவிட்டது. அனைத்துக் கட்சிகளும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. ஜம்முகாஷ்மீர் விவகாரத்தைப் பொருத்தவரை இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏதாவது நிலுவையில் ஒரு விஷயம் இருக்கிறது என்றால், அது ஆக்கிரமிப்பு பாகிஸ்தானை இந்தியாமீட்பதுதான் எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் இறையாண்மையையும், எல்லைப்புற நேர்மையையும் மீறும் செயலாகும். ஜம்முகாஷ்மீர் மாநிலம் முழுவதும் இந்தியாவின் ஒரு அங்கமாகும். சட்ட விரோதமாக காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இதைத்தான் இந்திய அரசு தொடர்ந்துவலியுறுத்தி வருகிறது. இந்திய எல்லைப் பகுதி குறித்து தவறாக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த அறிக்கை என்பது, ஏற்க முடியாத, தவறாக வழிநடத்தக்கூடிய, தீங்கான அறிக்கையாகும். ஆசாத் ஜம்முகாஷ்மீர், கில்ஜித் பல்திஸ்தான் எந்த விதமான உரிமை கோரலும் இல்லை. இந்த அறிக்கையில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து குறிப்பிடவே இல்லை.

தீவிரவாதிகள் என்றும், ஆயுதம் ஏந்தியவன்முறை குழுக்கள் எனவும் ஐநாவால் குறிப்பிடப் பட்டவர்களை இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் தலைவர்கள் போல் சித்தரிக்கிறார்கள். தீவிரவாதத்தை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்ற ஐநாவின் நிலைப்பாட்டை இது குறைத்து மதிப்பிடுகிறது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...