பேச்சால் நாட்டையே மெய்மறக்க வைத்த மா மனிதர்

2004ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி அமைச்சரவை கூட்டத்தை முடித்த அடல் பிஹாரி வாஜ்பாயி ராஷ்டிரபதி பவனுக்கு சென்றார். தேசிய ஜனநாயக கூட்டணி அப்போது நடைபெற்றிருந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்திருந்தது.

ஔரங்கசீப் சாலைக்கு அருகிலிருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில், கட்சிப் பணியாளர்கள் கொண்டாடி கொண்டிருந்தார்கள்.

அடுத்த பிரதமராக சோனியா காந்தி வரக்கூடும் என்பது கிட்டதட்ட உறுதியாக தெரிந்ததால் அவர்கள் உற்சாகமடைந்திருந்தனர்.

பதவி விலகிய பின்னர் வாஜ்பாயி வழங்கிய தொலைக்காட்சி உரையில், "எனது கட்சியும், கூட்டணியும் தோற்றிருக்கலாம். ஆனால், இந்தியா வெற்றியடைந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

வாஜ்பாயி அடுத்த எதிர்க்கட்சி தலைவராக இருப்பார் என்ற நிலை இருந்தது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், இது பற்றி சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ஆனால், அரசியல் தனிமையை நோக்கி வாஜ்பாய் ஏன் சென்றார் என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது.

தன்னுடைய பேச்சால் நாட்டையே மெய்மறக்க வைத்த ஒரு மனிதர் அமைதியானார்.

சிறந்த பேச்சாளர், புலவர் மற்றும் தலைசிறந்த அரசியல்வாதி ஏ.பி. வாஜ்பாயி, கடந்த 14 ஆண்டுகளில் பொது வாழ்வில் பெரிய அளவில் தோன்றவில்லை.

அவருக்கு என்ன நடந்தது?

2004-ல் நடத்தப்பட்ட "ஒளிரும் இந்தியா" பரப்புரைக்கு பின்னரும், பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தது.

தன்னுடைய மனசாட்சியின் குரலுக்கு செவிமடுப்பதாக தெரிவித்து, மன்மோகன் சிங்கை சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராக நியமித்தார்.

எல்.கே.அத்வானி மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.

வாஜ்பாயி மெதுவாக பொது வாழ்வில் இருந்து ஒதுங்கி கொண்டிருந்தார்.

பொது வாழ்வில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரான வாஜ்பாயி ஓய்வுபெற மாட்டார் என்று சுஷ்மா சுவராஜ் அறிவித்திருந்தாலும், வேறுபட்ட கருத்துக்கள் நிலவின.

2005ம் ஆண்டு மும்பை சிவாஜி பூங்காவில் பாரதிய ஜனதா கட்சியின் வெள்ளிவிழா கொண்டாட்ட பேரணியில் பேசுகையில், தேர்தல் அரசியலில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக வாஜ்பாயி அறிவித்தார்.

கவிதை மொழியில் பேசவல்ல மனிதரான வாஜ்பாயி இந்தப் பேரணியில் குறுகியதொரு உரையாற்றினார்.

கட்சியின் புதிய ராம்-லட்சுமணனாக விளங்கும் அத்வானி மற்றும் பிரமோத் மகாராஜனிடம் நம்பிக்கையோடு இருக்க கட்சியை அவர் வலியுறுத்தினார்.

மக்களவையில் அப்போதும் லக்னோவை பிரதிநிதித்துவப்படுத்துபவராக வாஜ்பாயி இருந்தாலும், நாடாளுமன்ற கூட்டங்களுக்கு ஒழுங்காக வர அவருடைய உடல் நலம் அனுமதிக்கவில்லை.

2007 இந்திய குடியரசு துணை தலைவர் தேர்தலில் அவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த காணொளி பலரது இதயங்களை நொறுக்கியது.

2007 உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் வாஜ்பாய் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளலாம் என்று நம்பப்பட்டது. ஆனால், லக்னோவில் நடைபெற்ற பரப்புரை பேரணியில் பங்கேற்ற வாஜ்பாயி அங்கிருந்து கொண்டே பார்வையிடுவதாக வாக்குறுதி அளித்தார்.

இதற்கு முன்னதாகவே கட்சிப்பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்ற விருப்பத்தை ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான பஞ்சஜ்யனில் வாஜ்பாயி தெரிவித்திருந்தார். அந்த ஆண்டு அவரால் வாக்களிக்க முடியவில்லை.

2007ம் ஆண்டு நாக்பூரில் ரிஷிம்பௌகில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் வாஜ்பாயி பங்கேற்றார்.

"பெரும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. சக்கர நாற்காலியில் இருக்கும் வாஜ்பாயை மேடையில் ஏற்றுவதற்கு சிறப்பு மின் தூக்கி (லிப்ட்) பொருத்தப்பட்டிருந்தது.

அவர் மேடைக்கு வந்தபோது, மக்கள் உணர்ச்சிவசப்பட்டனர். பலர் தங்களுடைய காலணியை அகற்றிவிட்டு தெய்வத்தை நோக்கி செபிக்கின்ற "பிராணயாமா"வை சொல்ல தொடங்கினர் என்று பிபிசியின் மராத்தி பிரிவை சேர்ந்த ரோஹன் நாம்ஜோஷி நினைவுகூர்ந்தார்.

2009ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தன்னுடைய கடைசி பதவி காலம் முடிவடைந்த பின்னர், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.

வாஜ்பாயின் உடல் நலக்குறைவு

2000ம் ஆண்டு வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, அவருடைய வலது கால்மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மும்பையிலுள்ள பீச் கேன்டி மருத்துவமனையில் செய்யப்பட்டது.

2004ம் ஆண்டுக்கு பின்னர் அவருடைய இயங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டன.

2009ம் ஆண்டு வாஜ்பாயிக்கு ஏற்பட்ட பக்கவாதத்தால், அவரால் சரியாக பேச முடியவில்லை என்று அவருடைய நீண்டகால நண்பரான என். எம் ஹொட்டே நினைவுகூர்கிறார். ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அல்சமர் அல்லது டிமன்சியா (ஞாபக மறதி) நோயால் வாஜ்பாய் துன்புற்று வருவதாக எப்போதும் அனுமானங்கள் இருந்தன. ஞாபக மறதியால் அவர் துன்புறுவது உண்மையாக இருந்தாலும், யாரும் இது பற்றி அதிகாரபூர்வமாக பேசவில்லை.

அவருக்கு ஞாபக மறதி நோய் இருப்பது பற்றிய அறிக்கைகளை வாஜ்பாய்க்கு 15 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர் ரன்டீப் குலெரியாவும் மறுத்துள்ளார்.

சீன உணவுகளை பெரிதும் விரும்புகின்ற வாஜ்பாயி, இனிப்பு வகைகளை விரும்பி உண்பவர்.

ஆனால், நீரிழிவு, சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீர் பாதையில் நோய் தொற்றால், இனிப்பு உணவு வகைகள் சில சிறப்பு தருணங்கள் மட்டும் தயார் செய்யப்பட்டு அவருக்கு சிறிய அளவே வழங்கப்படுகின்றன.

வாஜ்பாயிக்கு பாரத ரத்னா விருது

2015ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளால் பாரத ரத்னா விருது வழங்கி வாஜ்பாயிகௌரவிக்கப்ட்டார்,

அப்போதும் சக்கர நாற்காலியில் அமர்ந்து துன்பப்படும் வாஜ்பாயை ஒரு கணம் மக்கள் சந்தித்தார்கள்.

வாஜ்பாயிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது.

அவர் நலமாக இருந்தபோதே இந்த விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று பலரும் கூறினர்.

வாஜ்பாயி எங்கிருக்கிறார்?

பல ஆண்டுகளாக தன்னுடைய தத்து மகள் நமிதா கட்டாச்சாரியாவுடன் , கிருஷ்ண மேனான் மார்கிலுள்ள தன்னுடைய வீட்டில் வாஜ்பாயி வாழ்ந்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

 

அவருடைய மருத்துவர்களும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.எம். ஹொட்டே, உத்தரகாண்ட முன்னாள் முதலமைச்சர் பி.சி கான்துரி மற்றும் அவருடைய நீண்டகால சகா எல்.கே. அத்வானி ஆகியோர்தான் அவரை ஒருங்காக சென்று சந்திப்பவர்கள்.

 

தன்னுடைய பிறந்தநாளை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடும் வாஜ்பாயியை சில தலைவர்களே சென்று சந்திக்கின்றனர். அவர்களில் ஒருவராக மன்மோகன் சிங் இருக்கிறார்.

என்.எம். ஹொட்டே உற்சாகமானதொரு சம்பவத்தை நினைவுகூர்கிறார்.

"1991ம் ஆண்டு வாஜ்பாய்க்கு தொலைபேசியில் அழைத்த நரசிம்ம ராவ், பட்ஜெட் பற்றி மிகவும் கடுமையாக வாஜ்பாய் விமர்சித்து விட்டதால், அவருடைய நிதி அமைச்சராக இருக்கும் மன்மோகன் சிங் பதவி விலக உள்ளதாக தெரிவித்தார். இதனை கேட்டவுடன், மன்மோகன் சிங்கை அழைத்த வாஜ்பாய், இந்த உரையை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுவொரு அரசியல் உரை. அப்போது இத்தகைய சிறப்பு பிணைப்பு அவர்கள் இருவரிடம் இருந்தது" என்று ஹொட்டே குறிப்பிடுகிறார்.

வாஜ்பாயை, அத்வானி தொடர்ந்து சந்தித்து வருகிறார். இவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் ராம்-லட்சுமணனாக பார்க்கப்படுகிறார்கள்.

இந்த இரட்டையரில், லட்சுமணனாக இருக்கின்ற அத்வானி, பாரதிய ஜனதா கட்சியின் வழி காட்டுதல் குழுவில் இன்றும் இருந்து வருகையில், ராமனான வாஜ்பாயி 14 ஆண்டுகளாக நீண்டகால தனிமைக்கு சென்றுவிட்டார்.

நன்றி பிபிசி தமிழ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...