ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கு செலவுத்தொகையை தருவதற்கு தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம்விதிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை கடந்த சிலதினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
அதில், காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளித்த மருத்துவ மனைகளுக்கான செலவுத் தொகையை தருவதற்கு தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சனிக்கிழமை கூறியதாவது:
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைகள் கோரும் செலவுத் தொகையை 15 நாள்களுக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கவேண்டும். தவறினால், கொடுக்க வேண்டிய தொகைக்கு, வாரம் 1 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் நேரடியாக மருத்துவமனைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் ஏழைக் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத்மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இந்ததிட்டத்தை பிரதமர் மோடி, வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தொடங்கிவைப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு 20 மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துவிட்டன. தில்லி, ஒடிஸா, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய 4 மாநில அரசுகள் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. அந்த மாநிலஅரசுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.