வழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: நாபார்டு வங்கி விளக்கம்

பணமதிப்புநீக்கத்தின்போது அமகதாபாத் மாவட்ட கூட்டுறவுவங்கியில் வழக்கத்துக்கு மாறாகச் செல்லாத ரூபாய் நோட்டுகள் ஏதும் டெபாசிட் செய்யப்பட வில்லை. கே.ஒய்.சி விதிமுறைப்படியே அனைத்தும் நடந்தது என்று நபார்டுவங்கி விளக்கம் அளித்துள்ளது.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பண மதிப்பு நீக்கத்தின் போது செல்லாத ரூ.500 ரூ.1000 நோட்டுகள் வழக்கத்துக்கு மாறாக ஏதும் டெபாசிட் செய்யப்பட வில்லை. ரிசர்வ் வங்கியின் கேஒய்சி விதிப்படியே பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அகமபாதாப் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மொத்தம் 17 லட்சம் கணக்குதாரர்கள் உள்ளனர். அதில் 1.6 லட்சம் வாடிக்கையாளர்கள் சராசரியாக ரூ.46ஆயிரத்து 795 டெபாசிட் செய்தனர். ஒட்டுமொத்த கணக்கு தாரர்களில் 9.37 சதவீதம் வாடிக்கையாளர்களே செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில்கொடுத்து மாற்றினார்கள்.

98.94 சதவீதம் வாடிக்கையாளர்கள் ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாகவே டெபாசிட் செய்தனர் மற்றும் செல்லாத ரூபாய்களைக் கொடுத்து பரிமாற்றம்செய்தனர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை 1.60 லட்சம் வாடிக்கையாளர்கள் மூலம் ரூ.746 கோடி டெபாசிட் வந்தது உண்மைதான். இது வங்கியின் டெபாசிட்களில் 15சதவீதம் மட்டுமே. இந்தடெபாசிட்கள் அனைத்தும் விதிமுறையின்படியே நடந்துள்ளது.

குஜராத்தில் உள்ள கூட்டுறவுவங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்களைக் காட்டிலும், மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் தான் அதிகமாகும்.

அகமதாபாத் மாவட்டகூட்டுறவு வங்கியில் வர்த்தக அளவு என்பது ரூ.9 ஆயிரம் கோடியாகும். நாட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவுவங்கிகளில் முதல் 10 இடங்களில் இந்தவங்கி இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த வங்கிக்குச் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், வங்கியில் செய்யப்பட்டடெபாசிட்கள் விதிமுறைப்படியே நடந்துள்ளன.

இவ்வாறு நபார்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.