2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரதில் சட்ட அமைச்சகமும் சட்ட அதிகாரிகளும் பிரதமருக்கு தவறான ஆலோசனை வழங்கி, பிரச்னையை திசை திருப்ப பார்க்கிரர்கள் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, ராஜா மீது வழக்கு தொடர அனுமதிக் கேட்டு, பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு இருந்தேன். பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர் . சட்டம் தொடர்பாக அவருக்கு ஆலோசனை தேவைப்பட்டிருக்கிறது.ஆனால், மத்திய சட்டஅமைச்சகம் தவறான ஆலோசனை வழங்கி பிரதமரை திசை திருப்பியிருக்கிறது. நான் 2008 நவ. 29 -ம் தேதி. கடிதம் எழுதினேன் ஆனால் இதற்கு அதிகாரிகள் 16 மாதங்கள் காலம அவகாசம் எடுத்து கொண்டு உள்ளனர்.
உயர் அதிகாரிகள்-ராஜாவை பாது காப்பதில் மிக அதிக அக்கறை எடுத்துக்கொண்டுள்ளனர் அனுமதி தொடர்பான விஷயத்தில் தாமதத்தை ஏற்படுத்தினர். நாட்டின் உயர் பதவி வகிக்க கூடிய இடத்திலேயே இப்படி ஒரு அஜாக்கிரதை இருந்தால், தனி-நபரால் இனி மேல் மனுகொடுத்தால் அதற்க்கு அனுமதி கிடைக்குமா என அவ-நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உயர்ந்த இடத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஊழல் போன்ற முக்கியமான விஷயதில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறையை தெளிவுபடுத்த வேண்டும். என சாமி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.