நீட்நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்கு இரு முறை

ஜீ நுழைவுத் தேர்வும், நீட்நுழைவுத் தேர்வும் இனி ஆண்டிற்கு இரு முறை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் புதுடெல்லியில் செய்தியார்களிடம் கூறுகையில், ''பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான ஜீ தேர்வும், மருத்துவ கல்வி பயில்வதற்கான நீட்தேர்வும் இனி ஆண்டிற்கு இரு முறை நடைபெறும்.

தேசிய சோதனைத் தேர்வு முகமை இந்த ஆண்டு தேர்வுகளை நடத்தும். ஆண்டிற்கு இருமுறை நடக்கும் இத்தேர்வில் முதன்முறை பங்கேற்ற மாணவர்கள் அடுத்த முறையும் பங்கேற்கலாம்.

எது சிறந்த மதிப்பெண்ணோ அது கணக்கிடப்படும். தேசிய சோதனைத்தேர்வு முகமையின் கீழ் நடைபெறும் அனைத்துத் தேர்வுகளும் இனி கணினியை அடிப்படையாக கொண்டே நடைபெறும்.

கம்ப்யூட்டர் அணுக வசதியற்றவர்களுக்கென்று ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் கம்ப்யூட்டர் மையங்களில் பயிற்சி அமைக்கப்படும்'' என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நீட்தேர்வில் மட்டும் தமிழத்தை சேர்ந்த 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சோதனை பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள் இதுநாள் வரை டெஸ்ட் புக்லெட்களில் விண்ணப்பதாரர்கள் எழுதி வந்தனர். தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு முற்றிலும் கணினிமயம் என்று மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...