ரஷ்யாவிடம் இருந்து, 'எஸ் – -400' ரக ஏவுகணையை கொள்முதல்செய்வது தொடர்பாக நடத்திவந்த பேச்சு, இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது. ''விரைவில் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்,'' என, ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அச்சுறுத் தல்களை எதிர்கொள்ள, ரஷ்யாவிடம் இருந்து, அதிநவீன, எஸ் — 400 ரக ஏவுகணைகளை வாங்க, அந்தநாட்டுடன், மத்திய அரசு அதிகாரிகள் பேச்சு நடத்திவந்தனர்.இதற்கிடையில், 'ரஷ்யாவிடம் ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகள், தடைசெய்யப்பட்ட பட்டியலின் கீழ் சேர்க்கப்படும்' என, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இது தொடர்பாக, அமெரிக்க பார்லிமென்டில், சட்டமும்
நிறைவேற்றப்பட்டது.இதுபற்றி ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்கு சமீபத்தில் சென்று, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்துப்பேசினார். அமெரிக்க நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து, இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், டில்லியில், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:ரஷ்யாவிடம் இருந்து, எஸ் – 400 ரக ஏவுகணையை கொள்முதல் செய்வதற்கான பேச்சு, முடிவடைந்துவிட்டது. விரைவில், இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.ரஷ்யாவிடமிருந்து, ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு எதிர்ப்புதெரிவித்து, அமெரிக்கா நிறைவேற்றியுள்ள சட்டம் பற்றி கவலை யில்லை. ரஷ்யாவுடனான நம் ராணுவ உறவு, பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.