பல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்

நாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.


தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசியகொடியை ஏற்றி வைத்தார். செங்கோட்டையில் 5வது முறையாக பிரதமர் மோடி கொடியேற்றி உள்ளார். தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின  உரையை ஆற்றினார்.


அப்போது அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நாடு புதிய வளர்ச்சி நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. இந்த நாள் நாட்டிற்கு புதிய பலத்தை தந்துள்ளது. நாட்டின் மகள்கள் நமது நாட்டிற்கு கவரவத்தை தேடி தந்துள்ளனர். எவரெஸ்டில் மூவர்ணகொடியின் கவுரவத்தையும் பெருமையையும் இந்திர ராணுவம் பாதுகாத்து வருகிறது.பார்லி., செயல்பாடு ஆக்கபூர்மாக அமைந்து, நாட்டிற்கு நீதியை வழங்கி உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கு அரசு உரிமை வழங்கிஉள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துணை நிற்கும். உலகில் 6வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை இந்தியா எட்டி உள்ளதை நினைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெருமை கொள்கின்றனர். நாட்டின் சுதப்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த அனைவரையும் வணங்குகிறேன்.


மகாகவி பாரதி கூறியதைபோல் எல்லோரும் நல்முறை எய்தும் நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும். பல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம். நலிவடைந்தவர்களும் எந்த தடையும் இன்றி முன்னேற அரசு வழிவகை செய்துள்ளது. பா.ஜ., அரசில் வாரிசு அரசியல் இல்லை. ஜிஎஸ்டியை அமல்படுத்தும் துணிவு இருந்தது. வரி செலுத்துவோர் இந்திய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

2013 ஆண்டு பின்னோக்கி இருந்த நமது நாட்டின் வளர்ச்சி இன்று முன்னேற்றமடைந்துள்ளது.புதிய தொழில்நுட்பத்துடன் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர்.சுய வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முத்ரா திட்டமித்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தொழிலதிபர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார ஆபத்தில் இருந்து நாடு மீண்டுள்ளது.

சாலை, வான்வெளி, கடல்வெளி ஆகிய அனைத்திலும் தன்னிறைவு அடைந்து வருகிறோம். நாட்டின் கடைக்கோடி கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புக்களால் நமது விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்தியாவின் குரலை உலக நாடுகள் கேட்க துவுங்கி உள்ளன. விவசாயித்திலும் விஞ்ஞானத்தை இணைத்து வெற்றி காண்பதே இந்திய அரசின் குறிக்கோள். பிரதமரின் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்.,25 முதல் துவங்கப்படும். இதன் மூலம் 50 கோடி இந்தியர்கள் பயனடைவார்கள்.
reform, perform and transform (சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்) இதுவே மத்திய அரசின் தாரகமந்திரம். 2022 க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியா என்ற யானை உறங்கிக் கொண்டிருந்த நிலை மாறி விட்டது. இப்போது யானை எழுந்து விட்டது. முதலீடுகள் மற்றும் தொழில்துவங்குவதற்கு ஏற்ற நாடாக இந்தியா மாறி உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி பேர் வருமைகோட்டிற்கு மேல் வந்துள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். நேர்மையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் இருமடங்காகி உள்ளது. மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கே உங்களின் வரிப்பயணம் பயன்படுத்தப்படுகிறது.

விளையாட்டு முதல் பார்லி., வரை பெண்களின் பங்கு பெருமைக்குரியது. சுப்ரீம் கோர்ட்டில் தற்போது 3 பெண் நீதிபதிகள் உள்ளனர். முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. பெண்கள் நாட்டை பெருமை அடையச் செய்துள்ளனர். பெண்களின் உரிமையை காப்பதில் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

ஊழல்வாதிகளுக்கும், கறுப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பு இல்லை. கறுப்பு பணம் பதுக்வோரையும், ஊழல்வாதிகளையும் தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. பாலியல் குற்றங்கள்செய்வோர் மிருகங்கள். அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. பெண்கள் மதிக்க பெற்றோர் கற்றுத்தர வேண்டும். ஆண்களைப் போல் பெண்களும் நிரந்தர அதிகாரம் பெருவார்கள். நாட்டின் நலன் கருதியே அரசு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா, காங்., தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...