கடந்த 15 ஆண்டுகளாக திமுக – பாஜக இடையே சுமூகமான உறவுஇல்லை. திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே இருந்துவந்தது. காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர்ந்து இருந்துவந்தாலும் 2ஜி வழக்கில் திமுகவை அக்கட்சி கைகழுவிவிட்டது.
இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணா நிதியின் மகள் கனிமொழி ஆகியயோர் பல ஆண்டுகள் சிறையில் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் சிபிஐ நீதிமன்றத்தில் மிகச்சிறப்பாக வாதாடி 2ஜி வழக்கில் இருந்து ராசாவும், கனிமொழியும் விடுதலை ஆகினர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவேண்டும் என திமுக தொண்டர்கள் விரும்பினர். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் அதற்கு முட்டுக்கட்டைபோட்டதால் திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே தொடர்ந்தது.
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி கருணாநிதி மறைந்தார். அவரது மறைவுக்கு நேரடியாக சென்னைவந்த பிரதமர் மோடி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவின்போது ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி சென்று வாஜ்பாயி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வுகள் பாஜக – திமுக இடையே ஒருஇணக்கமான சூழலை உருவாக்கியுள்ளதாக பொதுவெளியில் பேசப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படுவதற்காக சென்னை கொண்டுவரப்பட்டு கமலாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை முதல் ஆளாய் கமலாலயம்சென்ற ஸ்டாலின் வாஜ்பாயி அஸ்தி கலசத்துக்கு அஞ்சலிசெலுத்தினார். அவரைத் தொடர்ந்து கனிமொழியும் அஞ்சலி செலுத்தினார்.
இதனிடையே சென்னையில் வரும் 30 ம் தேதி தெற்கிலிருந்து உதித்த சூரியன் கலைஞர் என்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த இரு நிகழ்வுகளும் திமுக – பாஜக இடையே ஒருபுதிய உறவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.