கடந்த 4 ஆண்டுகளில் 5 கோடிபேர், வறுமையில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் தமது சொந்தமக்களவைத் தொகுதியான வாராணசியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுடன் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். அப்போது மோடி கூறியதாவது:
பின்தங்கியுள்ள மக்கள் அனைவரையும், வளர்ச்சிபாதையில் அழைத்து வருவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 5 கோடி பேரை வறுமையில் இருந்து மத்தியஅரசு மீட்டுள்ளது.
இந்தியா வேகமாக தற்போது முன்னேறி வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, நாட்டில் கடந்த 67 ஆண்டுகளில் செயல் படுத்தாத அளவுக்கு வளர்ச்சித் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.
வாராணசியைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொருவரும், வளர்ச்சித் தொடர்பான இயக்கத்தில் தற்போது அங்கத்தினராக திகழ்கின்றனர். வாராணசியில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரவசி பாரதீயதிவாஸ் நடைபெறவிருக்கிறது. இது வெற்றியடைய வாராணசி மக்கள் அனைவரும் அரசுக்கு தங்களது ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்கவேண்டும்.
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே கட்சித்தொண்டர்கள் பிரசாரம் செய்யவேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்களின் பலன்கள், பயனாளிகளை சென்றடைவதை கட்சியினர் உறுதிசெய்ய வேண்டும் என்றார் மோடி.
ஆலோசனை குழு அமைப்பு: இதனிடையே, பிரதமர் மோடிக்கு அறிவியல், தொழில்நுட்ப விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதற்கு புதியகுழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தகுழுவில் கணித நிபுணர் மஞ்சுள் பார்கவா, புணேயில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கான மருத்துவகல்லூரி முதல் பெண் முதல்வர் மேஜர் ஜெனரல் மாதுரி கனித்கர், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதுதவிர்த்து, 10 மத்திய அமைச்சகங்களின் செயலர்கள் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.