தேச நலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்:

மஹாராஷ்டிராவில் உள்ள பீமாகோரேகான் விவகாரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் மாவோயிஸ சிந்தனை எழுத்தாளர் வராவரராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி, புகைப்படக் கலைஞர் கிராந்தி, வழக்கறிஞர் சுதா பரத்வராஜ் மற்றும் செய்தியாளர் ஒருவர் உட்பட 5 பேர் செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவை கொன்றது போன்று பிரதமர் மோடியையும் கொல்ல சதிதிட்டம் தீட்டப்பட்டது அம்பலமானது. இது தொடர்பான சோதனைகளில் லேப்-டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் இருந்த தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியது அம்பலமானது.

மாவோயிஸ சிந்தனை எழுத்தாளர் வராவர ராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி ஆகியோருக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

இந்தியாவிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மட்டும்தான் அனுமதி உள்ளது. இதர அனைத்து அமைப்புகளையும் மூடவேண்டியது தான். அந்த அமைப்புகளின் போராளிகளை கைதுசெய்ய வேண்டியதுதான். புதிய இந்தியாவுக்கு வரவேற்கிறேன் என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி அளித்துள்ளார். அதில், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மாவோயிஸ்டுகளால் தான் மிகப் பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல், மாவோயிஸ்டு அமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவுதெரிவிக்கிறார். அவர்களுக்காக அனுதாபப் படுகிறார். தேசநலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...