வாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி

கட்சியின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அதனையே எப்போதும் எதிரொலித்தவர் வாஜ்பாய் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புகழாரம் சூட்டினார். 
வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்தெரிவித்து நடைபெற்ற புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: 


நாட்டின் தலைசிறந்தப் பேச்சாளராகவும், காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராகவும் வாஜ்பாய் விளங்கினார். மிகச்சிறப்பு வாய்ந்த கவிஞராகவும், மனித நேயம் கொண்ட வராகவும் திகழ்ந்தார். கடந்த 1985-1990ஆம் ஆண்டு கால கட்டத்தில் பாஜக வெறும் 2 எம்.பி.க்களை மட்டுமே பெற்று மிகமோசமான நிலையில் இருந்தது. ஆனால், வாஜ்பாய் எங்களுக்கு வழிகாட்டியதுடன், ஊக்கமளித்து, கடின உழைப்பை செலுத்தியதால் ஆட்சியை பிடிக்கமுடிந்தது.
அவர் கண்ணியமிக்க கட்சிப் பணியாளராகவும் விளங்கினார். கட்சித்தலைமை ஏதாவது முடிவை எடுத்தால், அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். 


கட்சியின் குரலையே எப்போதும் எதிரொ லித்தார். தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் மூலம் சாலைகளையும், உள்அழைப்புகளுக்கான கட்டணத்தை இலவசமாக்கி தொலை தொடர்புகளையும் இணைத்தார். விமான நிலையங்கள், நதிகள் ஆகியவற்றையும் இணைக்க தொடர்ந்து பணியாற்றினார். சிலநதிகளை இணைத்து நாட்டு மக்களின் தாகம் தீர்த்தார். அவர் அனைத்து மொழிகள் மீதும் அளவற்ற அன்பினை கொண்டிருந்தார். 


இதனால், அந்தமொழிகள் செழுமை பெற்றன. கொள்கை ரீதியாக மாற்றுக் கட்சியினருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களை பெரிதும் மதித்தார். ஒரு போதும் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. மிகவும் கண்ணியமிக்க அரசியல் வாதியாக திகழ்ந்தார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...