மத்திய அரசை அகற்ற நக்சல் சதி

மத்திய அரசை அகற்ற நக்சலைட்கள் செய்தசதி குறித்த ஆதாரங்கள், கைதான அவர்களது ஆதரவாளர்கள் வீட்டில் நடந்த சோதனையில் கிடைத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

பிரதமர் மோடியை கொலைசெய்ய சதி திட்டம் தீட்டிய கும்பலுடன் தொடர்புடையதாக, நக்சலைட் அமைப்பை சேர்ந்த, எழுத்தாளர் வரவரராவ், ஐதராபாதில், கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதி களில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில், நக்சலைட் ஆதரவாளர்களான, வெர்னான் கன்சால்வெஸ், அருண் பெரைரா, தொழிற் சங்க தலைவர் சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவாலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 'இந்த ஐந்து பேரையும் செப்., 6 வரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இவர்கள் கைதுசெய்யப்பட்டது தொடர்பாக புனே போலீசார் கூறுகையில், நக்சல்களுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பது தெளிவாக தெரிந்த பின்னரே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மாவோயிஸ்ட்களுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பை ஆதாரங்கள் தெளிவாக காட்டியது.


சத்தீஸ்கரில் நக்சலைட்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடிகொடுக்க வேண்டும் என நக்சலைட்கள் திட்டமிட்டனர். இதனால் பெரியபாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என நினைத்தனர்.அவர்களின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கைதானவர்கள் பெரிதும் உதவி செய்தனர். இதில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கும் தொடர்புள்ளது.


ராஜிவ் கொலை போல், பிரதமரை கொல்லவேண்டும் என கடிதம் ஒன்றில் நக்சலைட்கள் கூறியுள்ளனர். கைதானவர்கள் வீட்டில் நடந்தசோதனையில், மத்திய அரசை அகற்ற மாவோயிஸ்ட்கள் செய்தசதி குறித்த ஆதாரங்கள் கிடைத்தன. இவ்வாறு அவர்கள் கூறினர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...