கேள்விகேட்க ராகுலுக்கு உரிமையில்லை

காங்கிரஸ் கட்சியின், ஒருகுடும்பத்தின் 60 ஆண்டுக்கால ஆட்சிகுறித்து ராகுல் காந்தி பதில் அளிக்க கடமைப்பட்டவர். ஆனால், மோடியின் அரசை குறித்து கேள்விகேட்க அவருக்கு உரிமையில்லை என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கடுமையாகச் சாடியுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. ராஜ் நந்த்கான் மாவட்டத்தில் உள்ள குருபாத் கிராமத்தில் இன்று நடந்த தேர்தல் 2-வது கட்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பிரதமர் மோடியின் 4 ஆண்டுக்கால ஆட்சி குறித்து கேள்விகேட்க எந்தவித உரிமையும் இல்லை. கடந்த 60 ஆண்டுகளாக ராகுலின் குடும்பத்தினர் தான் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். ஆனால்,ஏன் பெரும்பாலான கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வில்லை.

விவசாயிகளுக்கு ஏன் குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்க வில்லை. மற்ற நலத்திட்டங்கள் ஏதும் கிடைக்கவில்லை. 60 ஆண்டுகளாக என்ன விதமான ஆட்சியை நடத்தினீர்கள் என்று மக்கள் உங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்கு பதில்சொல்ல வேண்டிய பொறுப்பு ராகுல் காந்திக்கு இருக்கிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள், ஏழைப்பெண்கள், குடும்பத்தார் அனைவருக்கும் இலவசமாக ஸ்மார்ட் போன் அரசு செலவில் வழங்கப்பட உள்ளது. ஏறக்குறைய 45 லட்சம்பேர் இதில் பலனடைவார்கள்.

நான் காங்கிரஸ் கட்சியின் இளவரசரின் பேச்சை கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளாக மோடி என்ன நாட்டுக்கு செய்தார் என்று கேள்வி கேட்கிறார். இந்த கேள்வியைக் கூடகேட்க ராகுலுக்கு உரிமையில்லை. மக்கள் தான் உங்களின் குடும்பத்தின் ஆட்சி குறித்து கேள்வி கேட்க நினைக்கிறார்கள்.

நிலக்கரி ஊழலில் மிகப்பெரிய கொள்ளையை காங்கிரஸ் அரசு செய்துள்ளது,

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...