தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியை மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் சந்தித்தார்.
கன்னியாகுமரியில் உள்ள நாகர் கோயில் அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை இறுதிப்போருக்கு முக்கிய காரணமாக விளங்கிய காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கக் கூடாது.
கன்னியாகுமரி மாவட்டவளர்ச்சி பணிகள் குறித்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றேன். மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்தேன். நாகர் கோவிலை மாநகராட்சியாக்க வேண்டும் என முதல்வரரிடம் கோரிக்கைவைத்தேன். பாரத் ஆயுஷ்மான் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக் கிழமை திறந்து வைக்கிறார். என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.