15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடி தான் பிரதமர்

திருவாரூரில் பா.ஜனதா கட்சியின் பொற்றாமரை அமைப்பு சார்பில் கலை இலக்கியநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இல. கணேசன் எம்.பி. கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் சேரவேண்டும் என்று தி.மு.க.வினர் கனவிலும் நினைக்க மாட்டார்கள். பா.ஜ.க.வுக்கும் தி.மு.க. வுக்கும் எந்தஉறவும் இல்லை. அனைத்து கட்சியினரிடமும் நாங்கள் பழகி வருகின்றோம். ஆனால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உறவு உண்டு. இதைப்போல அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய பா.ஜனதா அரசு இணக்கமாகச் செயல்படுகிறது.

பாரம்பரியமாக பலநூறு ஆண்டுகளாக கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கத்தை யாரோ ஒரு சிலர் வழக்குத் தொடுத்தார்கள் என்பதற்காக அதை மாற்றி தீர்ப்பு வந்து இருக்கலாம். பொதுவாக பக்தர்கள் சட்டத்தை மதிப்பவர்கள். அதனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட மக்கள் எதிர்க்காமல் இருக்கலாம். சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு எதிராக தேவசம் போர்டு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்வருகிறது. அதில் வேறு விதமான நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். இந்த தீர்ப்பினால் பெண்கள் அதிகளவில் சபரிமலைக்கு செல்வார்கள் என்று கற்பனை செய்தால் ஏமாத்துபோவார்கள் . விளம்பரத்திற்காக சிலர் வேண்டுமானால் செல்ல முயற்சிக்கலாம்.

தகாத உறவு குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்புகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த சமுதாயம் தர்மத்தின் அடிப்படையில் உள்ள சமுதாயம் அதனால் இந்த சமுதாயத்தில் அந்த தீர்ப்பினால் எந்தமாற்றத்தையும் உண்டாக்க முடியாது என்பது என் கருத்து. இதனால் இந்த சமுதாயத்தில் எந்தத்தவறான மாற்றமும் வராது.

ராஜீவ் கொலை வழக்கில குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து யார்பேசினாலும் பலன் இல்லை. கவர்னர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளதால் எச். ராஜாவை கைது செய்ய முடியாது என காவல் துறை உயர் அதிகாரியே தெரிவித்துள்ளார். இது பற்றி எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்வது பெரிய வி‌ஷயமல்ல.

நாடுமுழவதும் எங்களுக்கு ஆதரவு கூடி வருகிறது. அதனால் பாராளுமன்றத்தில் தனித்து இருந்து தற்போது பெற்றவெற்றியை விட கூடுதலான இடங்களை பெறுவோம். இன்னும் 15 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடி தான் பிரதமர்.

இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...