காங்கிரஸ் கட்சியும் மிகவும் ஆணவமாக உள்ளது. தனியாகவே பா.ஜ.க.,வை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை அவர்களுடைய (காங்கிரஸ்) ஊழல் மற்றும் தவறுகளை இன்னும் மக்கள் மறக்க வில்லை. தவறை சரி செய்யுவும் அவர்கள் விரும்பவில்லை என்று விமர்சனம்செய்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பகுஜன் சமாஜ் தனியாகவே போட்டியிடும் என அறிவித்தார்.
பா.ஜ.க.,வை போன்று காங்கிரசும் எங்களுடைய கட்சியை அழித்து விட வேண்டும் என்று சதிதிட்டம் தீட்டுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.
மாயாவதியின் இந்த அறிவிப்பு 2019 தேர்தலுக்கு எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் காங்கிரசுக்கு நேரிட்டுள்ள மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப் படுகிறது. இந்நிலையில் காங்கிரஸை பா.ஜ.க விமர்சனம் செய்துள்ளது.
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என்பது காங்கிரஸை சார்ந்தது. ஆனால் மாயாவதியின் கவலையும், வலியும் பார்க்கையில் ஒன்றைமட்டும் என்னால் சொல்லமுடியும், “கூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே கிடையாது.” அவர்களுடைய முக்கியத்துவம் அனைத்தும் ஒருகுடும்பத்தின் மீதே இருக்கும்,” என்று விமர்சனம் செய்துள்ளார்.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.