சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்துவயது பெண்களும் சென்று, அய்யப்பனை தரிசிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு, பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்புதெரிவித்து கேரளாவில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடந்துவருகிறது.

இதைத் தொடர்ந்து சபரிமலையின் ஆகம விதிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜனதா கூட்டணி சார்பில் பந்தளம் முதல் திருவனந்தபுரம் வரை சபரிமலை பாதுகாப்பு ஊர்வலம் நேற்று நடந்தது.

ஊர்வலத்தை மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை தொடங்கிவைத்தார். இதில் பா.ஜனதா கூட்டணி கட்சியை சேர்ந்த துஷார் வெள்ளாப்பள்ளி, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலமுக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள், அய்யப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் மாலையில் அடூர் வந்து சேர்ந்தது. இந்த ஊர்வலம் காயங்குளம், கொல்லம், ஆற்றிங்கல் வழியாக வருகிற 15-ந் தேதி திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் வந்துசேரும்.

இதைப்போலவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சபரிமலை பாதுகாப்பை வலியுறுத்தி நேற்று ஊர்வலங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக பலஇடங்களில் போக்குவரத்து தடைபட்டது.

சபரிமலையின் ஆகம விதிகளை பாதுகாக்க வலியுறுத்தி நேற்று நாயர் சர்வீஸ் சங்கம் சார்பில் திருவனந்தபுரத்தில் பிரமாண்ட பேரணி-கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. பாளையம் கணபதி கோவிலில் தொடங்கிய பேரணி தலைமை ச்செயலக சாலை வழியாக மீண்டும் பாளையம் ரத்த சாட்சி மண்டபம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து அங்கு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டவர்கள் சபரிமலை ஆகம விதிகளை பாதுகாப்பது தொடர்பான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து புரோகித சமாஜத்தை சேர்ந்த புரோகிதர்கள் திருவனந்த புரத்தில் தலைமைச் செயலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...