சத்தீஸ்கரில் நடைபெறவுள்ள சட்ட சபை தேர்தலுக்காக 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்துக்கு விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாயினும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாஜக போராடுகிறது. நக்ஸல் நடமாட்டங்களுக்கு பெயர்பெற்ற மாநிலம் சத்தீஸ்கர்தான்.
கடந்த 2002-ஆம் ஆண்டு நக்ஸலைட் அமைப்புகளை சத்தீஸ்கரில் தடைசெய்த பெருமை ரமான் சிங்கையேசாரும். இவர் இதுவரை 3 முறை முதல்வராக பதவி வகித்து வருகிறார். எனவே இந்ததேர்தலில் பாஜக வெற்றி பெற முயற்சி எடுத்து வருகிறது.
அதன்படி சத்தீஸ்கரில் முதல்கட்ட பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அங்குள்ள 90 இடங்களில் 77 இடங்களில் போட்டியிடு பவர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது. அது போல் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
அதில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ம.பி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகியமாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் தேர்தல்பிரசாரம் செய்யவுள்ளனர். இவர்கள் தவிர்த்து பவன் சாய், ஹேமமாலினி, மனோஜ் திவாரி, ஸ்மிருதி இரானி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி, ஜேபி நட்டா, ரவிசங்கர் பிரசாத், நிதிதர்மேந்திர பிரதான், எம்பிக்கள் அபிஷேக்சிங், ரன்விஜய் பிரதாப் சிங் ஜூதேவ் உள்ளிட்டோரும் உள்ளனர்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.