2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி ஜப்பான் புறப்பட்டுசென்றார்.
ஜப்பானில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடிக்கு, டோக்கியோவில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் புஜி ((fuji)) மலை உச்சியில் உள்ள தமது விடுமுறை கால பண்ணை இல்லத்தில் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே விருந்தளிக்க திட்ட மிட்டுள்ளார்.
மேலும், இந்தியா – ஜப்பான் இடையிலான ஆண்டு கூட்டத்தின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், இந்தோபசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கண்காணிப்பது குறித்தும் இருதலைவர்களும் விவாதிக்க உள்ளனர். மேலும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களும் பிரதமரின் ஜப்பான் பயணத்தின்போது கையெழுத்தாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஜப்பான்பயணம் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:- ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் பல்வேறுதுறைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இந்த பயணம் இந்தியா – ஜப்பான் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும். இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை இந்த பயணம் மேம்படுத்தும். சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பம், விவசாயம், உணவு பதப் படுத்துதல், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் மேம்பாட்டுக்கு உதவும்வகையில் எனது ஜப்பான் பயணம் அமையும்.நாம்தொடங்கியுள்ள மேக் இன் இந்தியா, திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற பலதிட்டங்களுக்கு ஜப்பான் அதிகளவில் உதவி செய்துவருகிறது” இவ்வாறு தெரிவித்தார் மோடி.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.