வேளாண் துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
உத்தரபிரதேசத் தலைநகர் லக்னோவில் மத்திய அரசு சார்பிலான வேளாண்கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை டெல்லியிலிருந்து காணொளி முறை மூலமாக பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:வேளாண் துறையின் வளர்ச்சிக்காகவும், விவசாயிகளின் முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வரும் 2022-ம்ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் அரசு செயல்பட்டுவருகிறது. அந்த வகையில்,விவசாய இடுபொருட்களின்விலையைக் குறைப்பதற்கும், விவசாயிகள் லாபம் அடைவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேளாண்துறை வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்கள் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஒருதுறை, வளர்ச்சி பெற வேண்டுமானால், அதில் நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடு அதிக அளவில் இருக்கவேண்டும். காலத்துக்கு ஏற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.வேளாண் துறைக்கும் இது பொருந்தும். தற்போதைய காலகட்டத்தில் விவசாயத்துக்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும். இதற்கு அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
நம் நாட்டில் தற்போது அனைத்து துறைகளிலும் சூரிய மின்bசக்தியின் (சோலார்) பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதன்படி, சூரிய மின் சக்தியின் மூலம் விவசாயிகளின் தேவையை பூர்த்திசெய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக, எதிர்காலத்தில் நீர்பாசனத்துக்காக சோலார் பைப்புகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.