தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரbராஜன், ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரான குமரி அனந்தனின் மகளான தமிழிசை சவுந்தர ராஜன், கடந்த 1999 இல் பாஜக உறுப்பினரானார். கட்சி உறுப்பினராகி 15 ஆண்டுகளில் 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவரானார் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே பாஜகவுக்கு பெண் ஒருவர் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதிலும், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் எனவும் தமிழிசை உழைத்து கொண்டிருக்கிறார். சமீபத்தில்கூட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விடமிருந்து பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், தமிழிசை சவுந்தர ராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்துவரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசியல்,மருத்துவ,சமூகசேவைகளில் சர்வதேசளவில் சிறந்த செயல்பாடுடைய பெண் தலைவர் என்று சிகாகோ நகரில் செனட்டர் டேவிஸ் தலைமையில் நடைபெறும் 8-வது ஆண்டு பன்னாட்டு கலாச்சார ஒருங்கிணைப்பு சான்றோர் மையம்சார்பில் ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். விருதுவழங்கும் விழாவில் கலந்துகொண்டு மற்றும் சிகாகோ, வாஷிங்டன் மற்றும் பாஸ்டன் நகரின் தமிழ்சங்ககளின் அழைப்பை ஏற்று கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.