மேற்குவங்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ரதயாத்திரையைத் தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கபடும் என மாநில மகளிர் அணித் தலைவர் லாக்கெட் சாட்டர்ஜி பேசியுள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்குவங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் ரதயாத்திரைகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று ரதயாத்திரைகளை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேரணிகளை பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தொடங்கி வைப்பார் எனவும், இறுதியாக கொல்கத்தா நகரில் நடக்க உள்ள மாபெரும் பேரணியில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்ற வாய்ப்பிருப்பதாகவும் மாநில பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மால்டாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்சியின் மாநில மகளிர் அணி தலைவரான லாக்கெட் சாட்டர்ஜி, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்குவங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ரதயாத்திரையைத் தடுக்க எண்ணுபவர்களின் தலைகள் அந்த ரதச் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் எனக் கூறினார்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.