மூடு விழா!! மூடு விழா என்று கூப்பாடு போடுபர்களுக்கு!! ஓர் விஷயம் சொல்கிறேன்

மூடு விழா!! மூடு விழா என்று கூப்பாடு போடுபர்களுக்கு!!

ஓர் விஷயம் சொல்கிறேன் கேட்டு கொள்ளுங்கள்!!

2006 ஆட்சி காலத்தில் அதிமுக ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் தங்கள் இயற்க்கை உபாதைகளை கழிக்க சுகாதார மையம் அமைத்தது!! இருநூறு கோடி செலவு பண்ணி அமைத்தது!!

… ஆனால் அதனை அடுத்து வந்த திமுக அரசு அதனை திறக்காமல் பாழடைந்த கட்டிடமாக ஆக்கினார்கள்!!

இயற்க்கை உபாதை கழிக்கும் கட்டிடத்தை கூட மக்கள் பயன்படுத்தாமல் கருணாநிதி ஆக்கினார்!! நீங்கள் ஒருவரும் வாய் திறக்கவில்லை!! அது என்ன கருணாநிதி ஆட்சியில் நீங்கள் என்ன வாய் மூடி மவுநிகலா!!

மற்றும் மழை நீர் சேகரிப்பு என்பது எவ்வளவு பொன்னான திட்டம்!! அது என்ன  பண்ணியது!! அதன் மீது சுணக்கம் எதற்கு!!

உழவர் பாதுகாப்பு திட்டம் என்று அதிமுக காலத்தில் அறிமுகபடுத்தியது!! அதனை திமுக வந்தவுடன் மூடு விழா பண்ணியது

தொட்டில் குழந்தை திட்டம் என்பது உலகம் போற்றும் உன்னதமான திட்டம் அதனை மூடு விழா கட்டியது!!

பச்சை கலர் ஆக இருக்கும் கட்டிடத்தை, பெயர் பலகை, எல்லாவற்றையும் மஞ்சள் சாயம் பூசினார்கள்!!

பேருந்து நிறத்தை கூட விடவில்லை!!

திண்டிவனம் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் திட்டத்தை முடக்கிநீர்கள்!! இன்று வரை புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டவில்லை!!

புறநகர் பைப்பாஸ் சாலை செல்லும் மேம்பாலத்தை ஐந்து வருடமாக முக்கி முக்கி கட்டினார்கள்!!

கோவில், சர்ச் , மசூதி அன்னதான திட்டத்திற்கு அரசாங்க நிதியை குறைதீர்கள்!! சுணக்கம் ஏற்படுதிநீர்கள்!!

கோவில் செருப்பு இலவசமாக வைக்கலாம் என்ற உத்தரவை சுணக்கம் ஏற்படுத்தி கட்சிகாரர்களுக்கு காசு போகுமாறு பார்த்து கொண்டீர்கள்!!

தலைவர்களின் சிலை பொது இடத்தில திறக்க கூடாது!! அருங்கன்காட்சியில் தான் திறக்க வேண்டும் என்ற கொள்கை காற்றில் விட்டது!! ஏன் எனில் இவரது சிலை வைக்க இடையூறாக இருக்க கூடாதாம்!!

மணல் வருமானம் முழுவதும் அரசாங்கத்திற்கு போகும் நேரடி நிலை மாற்றி இடைத்தரகரை வைத்து இழந்த தனி நபர் வருமானத்தை மீட்டது

பள்ளி, கோவில் போன்ற இடங்களில் டாஸ்மாக் அருகில் அமையக்கூடாது என்ற விதியை காற்றோடு விட்டது!!

அதிமுக அரசு எந்த மாதிரியான திமுக திட்டத்திற்கு மூடு விழா பண்ணுகிறது

வருடத்திற்கு ஐந்து கோடி செலவு பண்ணும் கனிமொழி சங்கமத்திற்கு

அரசாங்க மருத்துவமனை சரி பண்ண வக்கு இல்லாமல் வருடத்திற்கு எழுநூறு கோடி
ரூபாய் செலவு செய்த தனியார் மருத்துவ காப்பிடு திட்டம்

கட்டிட வேலை முடியாமலே தோட்டாதரணி வைத்து பல கோடிகள் செலவு செய்து ஓர் திட்டம் இல்லாமல் கட்டிய ஊழல் மிகுந்த புதிய சட்டமன்றம்

பல கோடிகள் செலவு பண்ணி கண்ணகி சிலை பாதுகாப்பு

வாரம் வாரம் கோடிகள் செலவு பண்ணி வள்ளுவர் கோட்டத்தில் பாராட்டு விழா

சொந்த இடமே இல்லாதவர்க்கு வீடு கட்டி கொடுக்காமல், ஏற்க்கனவே வீடு உள்ளவர்களுக்கு இலவச வீடு என்று கக்குஸ் கூட கட்ட முடியாத திட்டம்

முப்பத்தி ஐந்து ரூபாய் தினசரி வருமானம் உள்ள நாட்டில் வெட்டி பந்தாவுடன் பல நூறு கோடிகள் செலவு செய்து நூலகம்

திறந்த கட்டிடத்தில் கருணாநிதி பெயர் மட்டும் போதாதா!! எதற்கு அவர் பொன்மொழிகள்!! அவர் கவிதை!! வேண்டாத பெருமை!! அதற்காக சில கல்வெட்டு மொழிகளை அழித்தார்!!

சமச்சீர் புத்தகத்தில் இருக்கும் கனி கவிதைகளும், கருணாநிதி கவிதைகளும், ஒத்த ரூபாய் கவி கவிதைகளையும் அழித்தார்!!

சென்னையில் இருக்கும் பூங்காவுக்கு எல்லாம் வெறி பிடித்தவர் மாதிரி செம்மொழி என்று பெயர் வைத்தல்!! இதனை செம்மொழி பூங்காக்கள், இதனை செம்மொழி நூலகம்!! அங்கு தொன்மை வாய்ந்த தமிழ் நூல்கள் கிடைக்குமோ இல்லையோ கனி கவிதை, கருணா பொன்மொழிகள், ஒத்த ரூபாய் கவி வரிகள், ஜால்ரா வைர வரிகள் கிடைக்கும்!!

திமுக குடும்ப தொழில் வளர அடுக்கு மாடி வீடு வைத்துள்ளவருக்கும் தொலைக்காட்சி கொடுப்பதை நிறத்தல்!!

மின்சாரத்திற்கு வழி காண வில்லை, ரோடு , பஸ் வசதி இல்லை, ஒரு ருப்பய்க்கு அரிசி வாங்குகிறார்கள்!! நானூறு ரூபாய் கொடுத்து எப்படி ஏழை மக்கள் காஸ் சிலின்டர் வாங்குவார்கள்!! இதனை நிறுத்தினார்!!

பேருந்துகளில் திருக்குறளை பின்னிளைபடுத்தி கருணாநிதி பொன்மொழிகள் முன்னிலை படுத்தியதை நீக்கம்!!

ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் அறிஞர்கள் பெயரில் இருக்கும் பலகலை கழகத்தை மூடும் நோக்கத்துடன் அண்ணா பல்கலை கழகத்தை கிளை என்று தேவை இல்லாமல் எல்லா மாவட்டங்களில் திறந்த இழிவான செயலை நீக்குதல்!!

சும்மா கதை விட்டு கதை விட்டு கூவுவதை விட்டு சிந்தித்து பாருங்கள்!!

ராதாகிருஷ்ணன் உலகநாதன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...