ஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்பு

தெலங்கா னாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தேர்தல்வாக்குறுதிகள் குறித்து அறிவித்துள்ளது.

அதன்படி, ‘மாநிலத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா-வை அறிமுகப் படுத்துவது, சமஸ்கிரத பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவுவது, ஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்பு ஒன்றை உருவாக்குவது, மதுபான விற்பனையை முறை படுத்துவது, 1 லட்சம் பசுக்களை ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்குக்கொடுப்பது, சபரிமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக பயணங்கள் ஏற்பாடுசெய்வது' உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து தெரியபடுத்தபட்டுள்ளன.

இதுகுறித்து பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்கும் கமிட்டியின் தலைவர் பிரபாகர், ‘யோகா என்பதை இந்துத்துவ அடையாளத்துடன் பார்க்கக் கூடாது. யோகா மனித ஆரோக்கியத்துக்கு நல்லது. கூடியசீக்கிரம் வாக்குறுதிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று' தெரிவித்துள்ளார். 

பிரபாகர் மேலும், ‘தெலங்கானாவில் பெரும் அளவிலான ஐடி ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களை பணியிலிருந்து திடீரெனநீக்குவது, அவர்கள் வாங்கிவரும் சம்பளத்தை திடீரென குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எதேச்சதிகார போக்குகளில் நிறுவனங்கள் எடுக்கின்றன. இதற்கு முடிவு கட்டும் நோக்கில் எங்கள் வாக்குறுதி இருக்கும்' என்று கூறியுள்ளார். 

 

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டண வைத்து களத்தில் இறங்கியது. இந்த முறை எந்தக் கட்சியுடனும் பாஜக கூட்டணிசேரவில்லை. அடுத்தமாதம் 7 ஆம் தேதி தெலங்கானாவில் தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

One response to “ஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்பு”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...