ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி அர்ஜென்டினா செல்கிறார்

 

அர்ஜென்டினா நாட்டில் உள்ள புனோஸ்ஐரெஸ் நகரில் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி 5 நாட்கள் பயணமாக இன்று (புதன் கிழமை) அர்ஜென்டினா புறப்படுகிறார். டிசம்பர் 2–ந்தேதி அவர் இந்தியா திரும்புகிறார் என்று வெளியுறவு செயலாளர் விஜய்கோகலே தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:–

‘நேர்மையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஒருமித்த கட்டமைப்பை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் இந்த ஜி20 உச்சிமாநாடு நடக்கிறது. 3 கட்டங்களாக இந்தமாநாடு நடக்கிறது. 3 கட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

10–வது மாநாடான இதில் முக்கியமாக கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தால் இந்திய பொருளா தாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து இந்தியா விளக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள், அடுத்த 10 ஆண்டுகளில் முன்னெடுத்து செல்ல வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள். வர்த்தகம், மிக பெரிய சர்வதேச பிரச்சினைகள், பருவநிலை மாற்றம், பயங்கர வாதம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப் படுகிறது.

இந்த மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர் களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்துபேசுவது உறுதியாகி உள்ளது. இதில் எல்லை பிரச்சினை குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு விஜய் கோகலே தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...