ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனா தலை நகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, மாநாடு நடப்பதற்கு முன்பாக சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மதுபின் சல்மானை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகளின் பல அம்சங்கள் குறித்து விவாதித்தனர். மேலும் பொருளாதார உறவு, கலாச்சாரம் மற்றும் எரி சக்தி துறையில் உறவை வலுப் படுத்துவதற்கான வழிகள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர். தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவுபாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: பட்டத்து இளவரசர் முகம்மதுபின் சல்மானுடனான சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்தது. இந்தியா – சவூதி அரேபிய இடையேயான உறவுகள் மற்றும் பொருளாதாரத்தை மேலும் ஊக்கப்படுத்துதல் கலாச்சாரம் மற்றும் எரிசக்திதுறை ஊக்கப்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்து பேசினார். இந்தசந்திப்பின் போது பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்தனர். கடந்த இரண்டு மாதங்களில் அன்டோனியோ குட்டெரெஸை இரண்டாவது முறையாக சந்தித்து பேசியுள்ளார் மோடி.
பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் இன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் மோடியுடன், ரஷிய அதிபர் விளாதிமிர்புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.
அமெரிக்கா-ஜப்பான்-இந்தியா முத்தரப்பு பேச்சு நடைபெறுவது இது முதல் முறையாகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
இருநாள்கள் (நவம்பர் 30, டிசம்பர் 1) நடைபெறும் ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிரதமர் நாடுதிரும்புகிறார்.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.