இந்துத்துவா பற்றி கேள்வி எழுப்பிய ராகுல்காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார். “ராமர் கற்பனைபாத்திரம் என சுப்ரீம் கோர்ட்டில் கூறினீர்களே, அப்போது உங்கள் இந்துத்துவா அறிவு எங்கேபோனது?” என அவர் கேட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவருகிறது. இந்த நிலையில் அங்குவரும் 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டுக்காக அர்ஜென்டினா சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் நாடு திரும்பினார்.
அதே சூட்டோடு சூடாக நேற்று அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.
ஜோத்பூரில் நடந்த கூட்டத்தில் அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அப்போது அவர், “பொய்களின் பல்கலைக் கழகம் காங்கிரஸ் கட்சி. ஒருவர் அந்தக் கட்சியில் புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டு வருகிறார். அதற்கான பரிசு அவருக்கு கிடைக்கப் போகிறது” என ஆவேசமாக கூறினார்.
மேலும் அவர் பேசும்போது, “ராஜஸ்தானை பொறுத்தமட்டில் ஒவ்வொரு 5 ஆண்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற பொதுவான கருத்து உள்ளது. எனவே தான் காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்யாமல் கூட, மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என நம்புகிறது. ஆனால் அது தவறு என்று நிரூபணமாக போகிறது. மறைந்த பைரோன் சிங் ஷெகாவத்துக்கு தொடர்ந்து 2-வது முறை ஆளுகிற வாய்ப்பு வழங்கப் பட்டது.
எங்களிடம் இப்போது இந்துத்துவா பற்றி கேள்வி கேட்கிறீர்களே, சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் ஆட்சி செய்தபோது தானே, ராமசேது பால வழக்கின் விசாரணையில் ராமர் கற்பனை கதாபாத்திரம் என சுப்ரீம்கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்செய்தீர்களே, அப்போது இந்த இந்துத்துவா அறிவு எங்கே போனது?”
“இந்துத்துவா பற்றிய எங்கள் அறிவு குறித்தும், அர்ப்பணிப்பு பற்றியும் கேள்வி கேட்கிறீர்களே, இதேகாங்கிரஸ் கட்சிதானே நாட்டின் முதல் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், சோமநாதர் கோவிலுக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது?”.
ராஜஸ்தான் மாநிலம், உதய் பூரில் கடந்த சனிக் கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரதீய ஜனதா கட்சியினரை சாடியபோது, “இந்துத்துவாவின் சாரம் என்ன? பிரதமர் மோடிதான் ஒரு இந்து என்கிறார். ஆனால் அவர் இந்து தன்மையின் அடிப்படையை புரிந்துகொள்ள வில்லை. அவர் என்ன மாதிரியான இந்து?” என கேட்டார். அதற்கு பிரதமர் மோடி, இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.
விவசாயிகள் பிரச்சினையை எழுப்பிய பிரதமர் மோடி, “நாட்டின் முதல் பிரதமராக சர்தார் வல்லபாய்படேல் வந்திருந்தால், இன்றைக்கு விவசாயிகள் சந்தித்து வருகிற பிரச்சினைகளுக்கு இடம் இருந்திருக்காது. விவசாயத்தை பற்றி அறிந்திரா தவர்கள், நாட்டை 4 தலைமுறைகளாக ஆட்சி செய்து விட்டார்கள். நான் தெளிவாகவே சொல்கிறேன். சட்டையில் ரோஜாப் பூவை குத்திக்கொண்டு வலம் வந்தவர்கள், தோட்டத்தை பற்றிய அறிவை கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் விவசாயத்தை பற்றிய அறிவை கொண்டிருக்க வில்லை” என்று சாடினார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.