ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. வெற்றிகளால் பா.ஜ.க துள்ளிக்குதிப்பதுமில்லை. தோல்விகளால் துவளப் போவதுமில்லை. அதுமட்டுமல்ல, இப்போது வந்திருக்கும் முடிவுகள் பா.ஜ.கவிற்கு பின்னடைவுமில்லை. காங்கிரசிற்கு முன்னேற்றமுமில்லை! ஏனென்றால் எல்லா மாநிலங்களிலும் காங்கிரசும், பா.ஜகவும் சில இடங்களில் தான் முன்னும் பின்னுமாக இருக்கிறது!…. பா.ஜ.கவிற்கு நிகழ்ந்திருப்பது படுதோல்வியும் அல்ல வெற்றிகரமான தோல்வி தான்….. காங்கிரசின் அருதிப் பெரும்பான்மையான வெற்றியுமல்லை!
முதலில் காங்கிரசும் பிற எதிர்கட்சிகளும் எப்போது பா.ஜ.க வெற்றி பெற்றாலும் வாக்கு எந்திரத்தையே குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்….. நாங்கள் வெற்றி பெற்றால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளாமல் , வாக்கு எந்திரத்தை குறை சொல்லி பா.ஜ.க தொண்டர்களின் உழைப்பையும் மக்களின் தீர்ப்பையும் கொச்சைப்படுத்தினார்கள். முதலில் அதற்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்….
அதுமட்டுமல்ல, ஏதோ பெரிய கூட்டணியை அமைத்தோம் என்று சந்திரபாபு நாயுடு முயற்சியால் என்று சொல்லிக் கொண்டிருந்த தி.மு.க போன்ற கட்சிகளுக்கு மிகப்பெரிய பாடத்தை இத்தேர்தல் உணர்த்தியிருக்கிறது…. ஏனென்றால் இந்தக் கூட்டணி தெலுங்கானவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதை விட அவர்கள் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள்……
ஆக எதிரணி கூட்டணி எதையும் வரும் மக்களவைத் தேர்தலில் சாதிக்க முடியாது என்பது அதிகாரப்பூர்வமாக நிருபிக்கப்படுகிறது…..
இன்னொரு முக்கியமான கருத்து இந்த மாநிலங்களில் அதிக நாட்கள் பா.ஜ.க ஆட்சி செய்து அதனால் மாநில அளவில் ஓர் சூழ்நிலை இருந்தாலும் கூட 54% மக்கள் மோடிதான் எங்கள் பிரதமராக போகிறார் என்றே சொல்லியிருக்கிறார்கள்…
அதே மக்கள் ராகுலுக்கு 20% வாக்குகளைத்தான் தருகிறார்கள். ஆக மோடி அலை ஓயவில்லை, ஓயவுமில்லை….. மோடி அலைக்கு எதிரான தலை எதிரணியினருக்கு கிடையாது. அதனால் இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் எந்த மாற்றமும் ஏற்படாது…. நிச்சயம் மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவோடு பா.ஜ.க வெற்றிபெறும்…
இந்த கடுமையான போட்டிக்கு உழைத்த பா.ஜ.க தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்…. தமிழகத்தில் தொண்டர்கள் கடுமையாக உழைத்து மக்களவையில் பா.ஜ.கவை வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
நன்றி Dr . தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக மாநில தலைவர்
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.