கேரள அரசை கண்டித்து முழு அடைப்பு

சபரிமலை விவகாரம்தொடர்பாக, கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசின் அணுகுமுறையை கண்டித்து அம்மாநில பாஜக சார்பில் கடந்த 4-ம்தேதி காலவரையற்ற தொடர் உண்ணா விரத போராட்டம் தொடங்கப்பட்டது.

போராட்டத்தை பாஜக மாநிலதலைவர் சி.கே.பத்மநாபன் தலைமைதாங்கி நடத்தி வருகிறார்.  திருவனந்த புரத்தில், தலைமை செயலகம் எதிரில் இந்தபோராட்டம் நடைபெற்று வருகிறது.



இதற்கிடையே, இன்று அதிகாலை உண்ணாவிரம் போராட்டம் நடைபெற்ற பகுதியில் 49 வயது ஐயப்பபக்தர் ஒருவர் சுவாமியே சரணம் ஐயப்பா  என்ற கோஷத்துடன் தனக்குதானே தீவைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.



விசாரணையில்,  தீக்குளித்தவர் பெயர் வேணு கோபாலன் நாயர் என்பதும், முத்தடா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சிகிச்சை பலனிறி அவர் மருத்துவமனையில் இறந்தார்.

இந்நிலையில், சபரிமலைவிவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தீக்குளித்த ஐயப்பபக்தர் இறந்ததை தொடர்ந்து, கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பாஜகவினர் கூறுகையில், வேணு கோபாலன் நாயர் மரணத்துக்கு கேரள அரசின் அலட்சியமே காரணம். அவரது சாவுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். எனவே கேரள அரசை கண்டித்து நாளை முழு அடைப்புபோராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...