பாகிஸ்தானில் சிந்து மகானத்தில் இருக்கும் ஷிகார்பூர் எனும் இடத்துக்கு அருகில் இருக்கும் சக்நகரில் இந்துக்கள் கணிசமாக வசித்து_வருகிறார்கள். அங்குமட்டும் 50 ஆயிரம் இந்துக்கள் வசிக்கிறார்கள் என தெரிகிறது.
சக் நகரில் டாக்டர்களாக தொழில்செய்து வருபவர்கள் டாக்டர் நரேஷ், டாக்டர் அசோக், டாக்டர் அஜீத், டாக்டர் சத்யபால்,
இந்த நான்கு பேரும் நேற்றுமாலை சக் டவுன் என்ற இடத்தில் இருக்கும் தங்களது கிளினிக்குகளில் இருந்தனர். அப்போது அங்குவந்த ஆயுதம் தாங்கியகும்பல் ஒன்று அவர்களை சுட்டுகொன்றது.
இதில் அந்த 4 பேரும் அந்தஇடத்திலேயே இறந்தனர். இது_இந்துக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்து மதத்தை_சேர்ந்த 4 டாக்டர்கள் பலியானதை முன்னாள்சட்டசபை உறுப்பினரும், பாகிஸ்தான் இந்துகவுன்சில் பாதுகாவலருமான டாக்டர் ரமேஷ்குமார் உறுதிப்படுத்தினார்.
எங்கள் சமூகத்தைசேர்ந்தவர்கள் இப்படி தாக்கப்படுவது இது முதல்முறை அல்ல, இது போன்ற தாக்குதல்களில் ஈடு படுபவர்களுக்கு போலீசார் ஆதரவுதருகிறார்கள். இதுதான் எங்களுக்கு கவலை தருகிறது என்று குறிப்பிட்டார்.
முஷரப் ஜனாதிபதியாக இருந்த போது இந்துக்கள்_பாதுகாப்பாக இருந்தனர். இப்போது நாங்கள் கிரிமினல்களுக்கும் , தீவிரவாதிகளுக்கும் இரையாகிவருகிறோம் என தெரிவித்தார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.