பிரதமர் மோடி மற்றும் இந்தியக்கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இருவருமே தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர், அவர்களை வீழ்த்துவது மிகவும்கடினம் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் மக்களவைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏறக்குறைய அதேசமயம், இந்தியக்கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்கிறது. டெல்லியில் நடைபெற்ற `ஆஜ்தக் அஜெண்டா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அருண் ஜெட்லியிடம் மக்களவைத் தேர்தல் மற்றும் கிரிக்கெட் உலகக்கோப்பை ஆகியவை குறித்து பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்தக்கேள்விக்குப் பதிலளித்த அருண் ஜெட்லி, “அவர்கள் இருவரும், தத்தமது துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்கள். அவர்களை வெல்வது எளிதான விசயம் அல்ல.. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது கடினம்.
“மகா பந்தன் எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது தோல்வியடைந்த ஓர் ஐடியா. இவ்வளவுகட்சிகள் கொண்ட கூட்டணியை ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதன் மூலம் எந்த ஒருநாடும் தற்கொலை முடிவை எடுக்காது. நிலைத்தன்மையோ அல்லது நிலையான கருத்தியலோ அவர்கள் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல்தான் தலைமையும்’’ என்றார். ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி வருவதாகக் குற்றம்சாட்டிய ஜெட்லி,
“ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் விஜய் மல்லையா விவகாரம் என இரண்டிலுமே ராகுல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க வேண்டுமென்றால் நம்பகத்தன்மையுடன் பேச வேண்டும்’’ என்றார்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.