வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புள்ள கிறிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி பெயரை குறிப்பிட்டதாக அமலாக்கத் துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. 2007ம் ஆண்டு, மன் மோன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, குடியரசு தலைவர், பிரதமர் மற்ற விவிஐபி.,களுக்கு ரூ.3600 கோடி செலவில் 12, அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட், சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் இடைத் தரகராக செயல்பட்டவர் கிறிஸ்டியன் மைக்கேல்.
கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக, அமலாக்கத் துறையால், 2016ம் ஆண்டு ஜூன் மாதம், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அகஸ்ட்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து கிறிஸ்டியன் மைக்கேல் 30 மில்லியன் யூரோஸ் லஞ்சம்பெற்றதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. ஹெலிகாப்டர் ஊழல் மேலும், இந்தியாவிலுள்ள பலருக்கும், ஹெலிகாப்டர் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றச் சாட்டுகள் எழத் தொடங்கின. முறைகேடுகள் புகாரால், ஒப்பந்தம் போடப்பட்ட 6 வருடங்களுக்கு பிறகு, அதை மத்திய அரசு ரத்துசெய்தது.
2016ல் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி லஞ்சம்பெற்ற புகாருக்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் டீல் இடைத் தரகர்களில் ஒருவரான கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து டிசம்பர் 4ம் தேதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கு விசாரணை , டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையின் போது சோனியா காந்தி பெயரை கிறிஸ்டியன் மைக்கேல் குறிப்பிட்டதாகவும், ஆனால், எந்த விஷயத்திற்காக அவர் சோனியா பெயரை குறிப்பிட்டார் என்பதை விசாரணையின் இப்போதைய கட்டத்தில் தெரிவிக்கமுடியாது என்றும், அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டீலிங்கில் பிக் மேன் என்று அழைக்கப்படுவர் R என்ற சங்கேத மொழியில் அழைக்கப் படுவதாகவும், கிறிஸ்டியன் மைக்கேல் மற்றும் இந்த டீலிங்கில் தொடர்புள்ள மற்றவர்கள் இந்த சங்கேத மொழியில் தான் உரையாடிக் கொண்டதாகவும், அமலாக்கத் துறை தெரிவித்தது. மேலும், துண்டுபேப்பர் வழியாக கிறிஸ்டியன் மைக்கேல் வழக்கறிஞர், அவருக்கு வாக்குமூலம் அளிப்பது தொடர்பாக வழிகாட்டி வருவதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
இதையடுத்து, காலை மற்றும் மாலை தலா 15 நிமிடங்கள்தான் கிறிஸ்டியன் மைக்கேலை அவரது வழக்கறிஞர் சந்திக்கவேண்டும், 3 அடி தொலைவில் இருந்தபடி தான் பேசவேண்டும் என்று, நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இத்தாலிபெண் மகன் மற்றொரு முக்கிய தகவலாக கிறிஸ்டியன் மைக்கேல் தனது வாக்கு மூலத்தில், ‘இத்தாலி பெண்ணின் மகன்’ என்றும் குறிப்பிட்டதாகவும், அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று கூறியதாகவும், அமலாக்கத் துறை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.