இந்தியா ஒரு மோசமான ஜனநாயக நாடு, இங்கு தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படுவது கிடையாது , மின் அணு ஓட்டு பதிவு இயந்திரத்தை தனது சின்னமான தாமரைக்கே ஓட்டுகள் விழுமாறு பாஜக தனக்கு சாதகமாக இயங்குமாறு அதுவும் 2014 தேர்தலில் அம்பானி மூலமாக இதை பாரதிய ஜனதா செய்தது என்றும் அதை இந்தியாவில் செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டாது லண்டனில் கூட்டியது இந்திய செய்தியாளர்கள் சங்கம்.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மென் பொறியாளர் சையது ஸூஜா கூறுகையில் பகிர்ந்து கொண்ட செய்தி நான் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு எதற்கும் என்னிடம் ஆதாரங்கள் கிடையாது! என்பது தான் ஸூப்பர் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.
ரபேல் விமான ஒப்பந்தத்தில் ராணுவ அமைச்சர் ஊழல் செய்து இருப்பார் என்று நான் சொல்லவில்லை, அதே நேரத்தில் இதில் பிரதமர் மோடி ஊழல் செய்து இருக்கிறார் என்று என்னால் குற்றம் சுமத்த முடியும் , மேலும் இது சம்மந்தமாக என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று இந்திய இத்தாலிய கூட்டு தயாரிப்பு பாராளுமன்றத்தில் முழங்கியது ..
இப்பொழுது ஒட்டு பதிவு இயந்திரம் அலப்பறை அதிகமா இருக்கு..
இதில் கலந்து கொண்டது காங்கிரஸின் வழக்கறிஞர் கபில் சிபல்!
ஏன் கலந்து கொண்டார்? என்று கேள்வி கேட்டால் அது அவரது சொந்த விவகாரம் என்று சொல்கிறது ..
இப்படித்தான் முன்பு
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூலம் காங்கிரஸ் ஒரு சர்ச்சையை கிளப்பியது
அது பின்னர் அவர்களுக்கே பூமராங் போல திரும்பியது
முன்னாள் நிர்வாக அதிகாரி அலெக்ஸ்சாண்டர் நிக் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் இருப்பதை குறுந்தகவல் சேகரிப்பவர் ஜிம்மி பார்லெட் உறுதிப்படுத்தியதும் காங்கிரஸ் கட்சியம் மோடிக்கு எதிராக செயல்படும் இந்தியாவில் பொய் செய்தி பரப்பும் ஊடகங்கள் மவுனமானது .
இதில் கூத்து என்னவென்றால் 2014 பொது தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா வாங்கிய ஓட்டு சதவிகிதம் 31% மட்டுமே என்று 19% வாங்கிய காங்கிரஸ் கட்சி , 0.8% வாங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 3.2% வாங்கிய சிபிஎம் ( இவர்கள் தேசிய கட்சி அந்தஸ்த்தை இழந்தவர்கள் ) என்று கூப்பாடு போட்டவர்கள் தமிழகத்தை பொறுத்த அளவில் அதிமுக மொத்தமாக 39/ 37 இடங்களை வென்றது இங்கே தாமரைக்கு ஒட்டு விழாது இரட்டை இலைக்கு விழ வைத்தார்களா ?.
திரிணமூல் காங்கிரஸ் 34 இடங்களை வென்றது ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் 21/20 இடங்களை வென்றது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி 11 இடங்களை வென்றது ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் 9 இடங்களை வென்றது சமாஜ் வாடி 5 இடங்களும் , லாலூவின் ராஷ்டிரிய ஜனதா 4 இடங்களை வென்றது ..அனைத்தும் வாக்கும் தாமரைக்கே விழும் என்றால் இவை எப்படி சாத்தியம் ?
2014 இருந்து மக்களவைக்கு பல இடை தேர்தல் அதில் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவு சமீபத்தில் 5 மாநில இடை தேர்தல் தெலுங்கானாவில் மொத்த தொகுதியையும் அள்ளி சென்றார் சந்திரசேகர ராவ். பஞ்சாப் தேர்தலில் கேப்டன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார் டெல்லியில் கெஜ்ரிவால் அபரிதமாக சீட்டுகளை பெற்று முதல்வரானார் .. இவை எப்படி சாத்தியம் ?
அவர்கள் ஆட்சியை பிடிக்க எதுவும் செய்வார்கள் கொலையும் செய்வாள் பத்தினி என்பது போல கொலையும் செய்ய துணிந்தவர்கள் 1991 பொது தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது அதில் முதல்கட்ட வாக்கு பதிவில் காங்கிரஸ் வென்ற இடங்கள் சொற்பம் ராஜிவ் மரணத்துக்கு பிறகு அவர்கள் தேர்தலில் அடித்து ஒட்டிய போஸ்டரில் ராஜீவின் சிரித்த முகம் அதில் அவர்கள் வைத்த வாசகம் “Maa bete ka yeh balidan, yaad kare gaa Hindustan” (இந்த தேசத்துக்காக தாயும் , மகனும் உயிர் தியாகம் செய்து இருப்பதை மறந்து விடாதீர்கள் ) என்ற அனுதாப அலையில்
பாஜக வைத்த ராமர் கோவில் கோஷம், தேசிய முன்னணி வைத்த மண்டல் கமிஷன் கோஷம் அடிபட்டு போனது..தமிழகத்தில் மண்டலா , கமண்டலமா ? என்ற எடுப்பான தேர்தல் யுத்தியை கையாண்ட கலைஞர் அந்த தேர்தலில் மக்கள் மாண்டவர் மீதான அனுதாபத்தில் மண்டலும் வேண்டாம், கமண்டலமும் வேண்டாம் என்று கலைஞரை மண்ணை கவ்வ வைத்தனர் ….
இதை அறிந்த தலைவர் எங்கள் குடும்பத்தை விட்டுவிடுங்கள் நாங்கள் உயிர் வாழனும் இழக்க எங்களிடம் இனி யாரும் இல்லை என்று பல முறை பேட்டியும் கொடுத்து இருக்கிறார்..
தந்தைக்கு நேர்ந்த கதி தனக்கும் நேர்ந்து விட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ..
காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் இருந்தாலும் , இல்லையென்றாலும் மக்களாட்சி ஜனநாயகத்தின் மீது என்றுமே நம்பிக்கை வைத்து கிடையாது . இப்போது நாட்டின் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வெற்றி பெற பார்க்கிறார்கள் .
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.