ஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்யும் திரிணாமுல்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அரசியலின்பெயரால் மக்கள் படுகொலை செய்யப் படுகின்றனர் .வரும் மக்களவைத் தேர்தல் இந்தியாவின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் மட்டுமின்றி மேற்குவ ங்கத்துக்கும் மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகத்தை படுகொலை செய்யும் திரிணமூல் காங்கிரஸ் அரசு தொடரவேண்டுமா, அல்லது தூக்கியெறியப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இருக்கும். முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அரசியலின் பெயரால் மக்கள் படுகொலை செய்ய படுகின்றனர். பாஜக மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பாஜக நடத்த திட்டமிட்டிருந்த ரத யாத்திரைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி தடைவிதித்துள்ளார். தோல்வி பயம் காரணமாகத்தான் பாஜக ரதயாத்திரைக்கு அவர் அனுமதி மறுத்துள்ளார். பாஜகவின் ரத யாத்திரையை வேண்டுமானால் மம்தா பானர்ஜி தடைசெய்யலாம். ஆனால், மக்களின் மனங்களில் தாமரை மலர்வதை அவரால் தடுக்க முடியாது. மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை நிலை நாட்டும் வகையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமையும். திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியடையும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொடுத்ததை விட மேற்கு வங்கத்துக்கான வளர்ச்சித் திட்டங்களுக்காக 2.5 மடங்கு அதிக நிதியை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொடுத்தது. அந்தப்பணத்தில் பாதியை ஊடுருவல் காரர்களும் மீதியை திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களும் எடுத்துக் கொண்டு விட்டனர். ஊடுருவல் காரர்களை திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆதரிக்கிறது. பாஜக ஆட்சிக்குவந்தால் ஊடுருவல் காரர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது. கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளனர். கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு மேற்கு வங்க மக்கள் முடிவுகட்டினர். அதேபோல, மம்தா பானர்ஜி ஆட்சிக்கும் மக்கள் முடிவுகட்ட வேண்டும்.

மேற்குவங்க மாநிலம் மால்டாவில் நடந்த கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்து பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...