283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிஅமைக்கிறது பாஜக என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆா் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேஜகூட்டணி., மொத்தமாக 283 தொகுதிகளில் வென்று கூட்டணி ஆட்சிஅமையும் என்று கூறியுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐமு.கூட்டணி 135 தொகுதிகளிலும் வெல்லும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு!
17 ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஆளும் தே.ஜ.கூட்டணி மற்றும் முந்தைய ஐ.மு.கூட்டணி, மகாகட்பந்தன் என்ற பெயரில் செயல்படும் மூன்றாவது மாநிலக் கட்சிகளின் அணி என பல தரப்பும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மும்முரத்தில் உள்ளன. இந்நிலையில் வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகளும் களைகட்டி வருகின்றன.
குறிப்பாக, முந்தைய அரசியல் சூழலை கருத்தில்கொண்டும், ராகுல் காந்தியின் பிரசாரம், மாறிவரும் கூட்டணிகளின் சூழல், கட்சிகளின் நிலைப்பாடு இவையும் இந்தக்கருத்துக் கணிப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். இந்நிலையில்,டைம்ஸ் நவ், விஎம்ஆா் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி…..
கேரளா: கேரளத்தில் இடதுசாரிகளுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கும் யுடிஎப் (ஐக்கிய ஜனநாயக முன்னணி) கூட்டணி 16 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும், இடதுசாரிகள் 3 தொகுதிகளிலும் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா: இங்கே தெலுகு தேசம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்று கூறப் படுகிறது.
இங்கு மொத்தமுள்ள 25 தொகுதிகளில், ஒய்.எஸ்.ஆா்.காங்கிரஸ் 22 தொகுதிளிலும், தெலுங்குதேசம் கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பாஜக, காங்கிரஸ்க்கு எதுவும் கிடைக்காது என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா: இங்கே சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்ற அதே வெற்றியை சந்திரசேகர்ராவ் தக்கவைப்பார் என்கிறார்கள்.
இங்கு, 17 தொகுதிகளில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 13 தொகுதிளிலும், பாஜக 2, காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
கா்நாடகா: இரு கூட்டணியும் சரிபாதிவெல்லும் என்கிறார்கள்.
28 தொகுதிகளில், பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் பெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மேற்குவங்கம்: இங்கு திரிணமுல், பாஜக., வெற்றிபெறும். காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் படுதோல்வியை சந்திப்பர் என்கிறார்கள்.
42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ்கட்சி 31 தொகுதிகளிலும், பாஜக 11 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
பிகார்: இங்கு தேஜ.கூட்டணிக்கு அதிகவாய்ப்பு உள்ளது.
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதிகளும் கிடைக்கக்கூடும்.
ஜார்கண்ட்: இங்கு இருகூட்டணிகளும் சரிபாதி பெறவாய்ப்புள்ளது.
பாஜக 8 தொகுதிளிலும், காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிளிலும் வெற்றி பெறக்கூடும்.
ஒடிசா : இங்கு பாஜக., அதிக தொகுதிகளைப் பெறலாம்.
மொத்தமுள்ள 21 தொகுதிகளில், பாஜக 14 தொகுதிகளிலும், பிஜூ ஜனதாதளம் 7 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
அஸ்ஸாம் : இங்கு பாஜக.,வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும்.
14 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 4, பாஜகவுக்கு 8, ஐடியுஎப்க்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது
மகாராஷ்டிரா: இங்கு தேஜ.கூட்டணிக்கு அதிகவாய்ப்பு உள்ளது.
மொத்தமுள்ள 48 தொகுதிகளில், பாஜக 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
குஜராத் : இங்கு பாஜக., ஒட்டுமொத்தமாக வெற்றிபெறும் எனப்படுகிறது.
பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால், தற்போதும் மோடிக்கான செல்வாக்கு அதிகம் இருப்பதால், இங்கு பாஜக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம்: மாறிவரும் கூட்டணி காரணத்தால், பாஜக., பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் எனப்படுகிறது.
இங்கு பாஜக.,வுக்கு 42 தொகுதிகளும், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கூட்டணிக்கு 36 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 2 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
உத்தராகண்ட்: சிறியமாநிலமான இதில், பாஜக., அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் என்கிறார்கள்.
இங்கு பாஜக 5 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம்: மாநிலத்தில் ஆட்சியை ஓரிருஇடங்களில் கோட்டை விட்ட பாஜக., இம்முறை அதிகதொகுதிகளைப் பெறும் என்கிறார்கள்.
பாஜக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
ராஜஸ்தான்: சட்டப்பேரவைத் தேர்தலில் சரிவு ஏற்பட்டாலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக., நல்லவெற்றிபெறும் என்கிறார்கள்.
25 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
தில்லி : தில்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியானா: இங்கும் பாஜக.,வுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
10 தொகுதிகளில் பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
பஞ்சாப்: இங்கு ஆளும் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 1 தொகுதியிலும் வெற்றி பெறலாம்.
ஜம்மு காஷ்மீா்: இங்கு பாஜக 2 தொகுதிகளிலும், ஜெகேஎன் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
இமாச்சல பிரதேசம் :4 தொகுதிகளில் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெறக் கூடும்.
சண்டிகா் : இருக்கும் ஒரு தொகுதியை பாஜக., கைப்பற்றும் என்கிறார்கள்.
சத்தீஸ்கா்: பாதிக்கும் மேல் பாஜக., கைப்பற்றும் என்கிறார்கள்.0
மொத்தமுள்ள 11 தொகுதிகளில் பாஜக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது
தமிழகம்: திமுக, கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 34 தொகுதிகளிலும், பாஜக, அதிமுக கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெறும் எனப் படுகிறது.
நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 283 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று இந்தக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 135 தொகுதிகளிலும், இதரகட்சிகள் 125 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று கூறப் படுகிறது.
தேர்தல் தொடங்க இன்னும் மூன்று வாரம் உள்ள நிலையில், நாட்டில் நிலவும் பிரசார பலம், அரசியல் சூழல் வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.