ஹரி ! உன்னுடைய உறவினர்கள் எல்லோரும் ராணுவத்தில் இருக்கிறார்கள். நானோ ராணுவத்தில் சுபேதாரராக இருக்கிறோன். எனவே அதை விடுத்து, உன்னை நிறைய படிக்க வைத்து, பெரிய அதிகாரியாகி, பிற்காலத்தில் ஆடம்பரமாக நீ வாழ வேண்டும் என்பது தான் என் ஆசை. அதனால் தான் உன்னை காலேஜில் படிக்க வைத்திருக்கிறேன். அப்படியிருக்க நீ நடுவில் ராணுவத்தில் போய் சேருகிறேன் என்கிறாயே என்ன அர்த்தர்?''
ஹரிச்சந்திரனின் தந்தை அவனிடம் இப்படி அநேக முறை கேட்டு விட்டார். ஆனால் அவனுக்கோ ராணுவத்தில் சேர்ந்து தேசசேவை புரிய வேண்டும் என்று ரத்த நாளங்களில் துடித்தது. அரசு அதிகாரியாக சேரில் உட்கார்ந்து காலத்தைக் கழிக்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அவன் பெல்காமிற்குப் போய் மராட்டாராணுவப் பிரிவில் சேர்ந்து விட்டான்.
அப்பொழுது நம் நாட்டை பிரிட்டிஷார் ஆண்டு வந்தனர். அவனுடைய ராணுவத் துடிப்பைக் கண்டு, அதிலேயே மேற்படிப்பு படிக்க டேராடூனிலுள்ள மிலிட்டரி அகாடமிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பட்டம் பெற்றவுடன் ராணுவத்தில் செகண்ட் லெப்டினென்ட் என்கிற பதவி கொடுத்தார்கள். ஹரிச்சந்திரனின் புத்திக் கூர்மை மற்றும் உறுதியான திட மனதினால் அவனுக்கு பதவி கொடுத்தார்கள் பிரிட்டிஷார்.
பிறகு நாடு சுதந்திரமடைந்தது. அப்பொழுது காஷ்மீரத்தை ஆக்கிரமித்து பாகிஸ்தான். ஹரிச்சந்திரன் அப்பொழுது கூர்கா படைக்கு லெப். கர்னலாக இருந்தான். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பைத் தடுக்க, அவனுடைய படை, விமானம் மூலம் லடாக் பகுதிக்கு அனுப்ப ஏற்பாடு ஆயிற்று.
லடாக் மிக குளிர்ந்த பிரதேசம். அங்கு போய் போரிட வெறும் 700 வீரர்கள் தான் அனுப்பப்பட்டிருந்தார்கள். ஆனால் அந்த இடத்தை ஏழாயிரம் பாகிஸ்தான் படைவீரர்கள் முற்றுகை இட்டு ஆக்கிரமித்திருந்தார்கள். ஆனால் லெப்டினன்ட் கர்னல் ஹரிச்சந்திரன் தன்னுடைய கடுமையான மேற்பார்வையினால், எதிராளிகளின் நடவடிக்கை மற்றும் நிலமையை முற்றிலும் தெரிந்து கொண்ட பிறகு, அவர்களை எப்படி சமாளிக்கலாம் என்று தீவிரமாகத் திட்டம் தீட்டினார்.
தன் 700 படைவீரர்களையும் 7 பிரிவுகளாகச் செய்து, ஒவ்வொரு பிரிவையும் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து அனுப்பினார். எல்லா படையினருக்கும் சங்கேத பாஷையில் கட்டளை அனுப்பும் முறையாக, ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக கட்டளை அனுப்பினார். அப்பொழுது இந்தியாவிற்கும், பாகிஸ்தானியர்களுக்கு சங்கேத பாஷை ஒன்றாக இருந்ததினால் அந்தக் கட்டளையை பாகிஸ்தானிய அதிகாரிகள் ஒட்டு கேட்டு, "சே! லடாக்கில் இந்தியா ஏழு முழு பட்டாலியன்களை (படைகளை) வைத்திருக்கும் போது, இவ்வளவு பெரிய சைனியத்தை நாம் எப்படி எதிர்கொள்வது? "என்று யோசித்தார்கள்.
அச்சமயம் லெப். கர்னல் ஹரிச்சந்திரனின் வசம் எண்ணி சில மெஷின்கன்களே இருந்தன. அவர் ஒரு யுக்தி செய்தார். ஒரு முகாமிலிருந்த நம் வீரனை சிறிது நேரம் மெஷின் கன்னினால் சுட்டுத்தள்ளச் சொன்னார். பிறகு, மெஷின் கன்னை கோவேறுக்கழுதை மேல் ஏற்றி, எதிரிப்படையை நோக்கி சுட்டுக் கொண்டே இரண்டாவது முகாமிற்கு போகச் சொன்னார். மூன்றாம் முகாமிலிருந்த நம் படைவீரர்கள், அங்கிருந்தபடியே, எதிரிகளை நோக்கி சுட்டார்கள். இப்படி ஏழு முகாம்களிலிருந்தும் தொடர்ந்து மெஷின் கன்னின் ஓசை எழுந்ததால், லடாக் பிரதேசத்தில் இந்திய ராணுவப்படை ஏழு இடங்களில் பதுங்கியிருப்பதாகவும், அவர்களிடம் நிறைய மெஷின் கன்கள் இருப்பதாகவும், பாகிஸ்தான் எண்ண, ஒரு மாயையை உண்டாக்கினார். இதனை எப்படி சமாளிப்பது என்கிற பயம் பாகிஸ்தானிய ராணுவ படைத்தளபதிகளிடம் ஏற்பட்டதால், அவர்கள் மேலும் அக்கிரமம் செய்யாமல், பின்னால் ஓடினார்கள்.
இப்படி கோவேறுக் கழுதைகளின் மே துப்பாக்கி ஏற்றி, அதன் பின்னால் குதிரைகள் மீது ஏறி உட்கார்ந்து, வரிசையாக அந்தக் கடுங்குளிர் பிரதேசத்தில், ஒவ்வொரு முகாமாகப் போய்க் கொண்டிருந்தபோது, லெப், கர்னல் ஹரிச்சந்திரன் குதிரை மீதிருந்து தவறி விழுந்தார். விழுந்த வேகத்தில் மார்பின் விலா எலும்புகள் உடைந்ததால், வலியால் துடிதுடித்தார். இருந்தாலும் அந்நிலையிலும், அவர்தன் கடமையை விடாமல் செய்தார். தன் கீழுள்ள படை வீரர்களுக்கு தகுந்த கட்டளைகளை இட்டு, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை, வேதனையை பொருட்படுத்தாமல், வெற்றி கண்டார். அவர் யுத்த வேலை முடிந்ததும், ராணுவ மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அந்தக் கடுங்குளிரிலும், போதிய படைபலமும், ராணுவ தளவாட பலமில்லாத நிலையிலும், தீவிரமாகப் போராடி, வெற்றி கண்டதற்காக எல்லோரும் அவரைப் பாராட்டினார்கள்.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.